எங்க விவகாரத்தில் தலையிடுங்க.. இந்திய தூதரிடம் பிரதமர் மோடிக்கான கடிதம் தந்த இலங்கை தமிழ் தலைவர்கள்
கொழும்பு: ஈழத் தமிழருக்கு அரசியல் அதிகாரம் வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளை இந்திய பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கைக்கான இந்திய தூதரிடம் ஈழத் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடிதம் அளித்தனர்.
Recommended Video
1987-ம் ஆண்டுக்கு பின்னர் ஈழத் தமிழர் பிரச்சனைகளில் இந்தியா தலையிடுவது இல்லை. இலங்கை விவகாரங்களில் இந்தியா சற்று ஒதுங்கியிருந்த போதும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை ராணுவத்துக்கு இந்தியா உதவி வந்தது.
2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது இந்தியா மிக முக்கிய பங்கு வகித்தது. இருப்பினும் இலங்கையை இந்தியா கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை. இதனால் இலங்கையில் சீனாவின் கை ஓங்கியது.

சீனாவின் ஆதிக்கம்
சிங்களர் பெரும்பான்மையினராக இருக்கும் தென்னிலங்கையில் சீனா ஆழமாக காலூன்றியது. இதனைத் தொடர்ந்து தமிழர் தாயக நிலமாக வடக்கு கிழக்குப் பகுதியிலும் சீனா காலூன்ற தொடங்கியது. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

இந்தியா தலையிட கோரிக்கை
இந்நிலையில் ஈழத் தமிழருக்கு அரசியல் அதிகாரப் பகிர்வு வழங்க இந்தியா தலையிட வேண்டும் என்பதை மீண்டும் தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக கொழும்பில் தமிழ் கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் அனுப்புவது என முடிவெடுக்கப்பட்டது.

மோடிக்கு கடிதம்
இதையடுத்து பிரதமர் மோடிக்கான கடிதத்தில் இடம்பெற வேண்டிய கருத்துகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இலங்கைக்கான இந்திய தூதரிடம் தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் இரா.சம்பந்தன் தலைமையில் பிரதமர் மோடிக்கான கடிதத்தை வழங்கினர். ஈழத் தமிழருக்கு அரசியல் அதிகாரப் பகிர்வு வழங்க இந்தியா தலையிட வேண்டும் என்பதை மீண்டும் தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். ஈழத் தமிழருக்கு அரசியல் அதிகாரம் வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளை இந்திய பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கைக்கான இந்திய தூதரிடம் ஈழத் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கடிதம் அளித்தனர்.
13-வது திருத்தம் என்பது என்ன?
1987-ம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் மூலம் உருவானது 13-வது அரசியல் சட்ட திருத்தம். மாகாண சபைகளை உருவாக்க வழிவகுத்தது 13-வது சட்டத் திருத்தம். மாகாணங்களின் சுயாட்சி அதிகாரத்துக்கும் இது வழிவகுக்கும். மாகாணங்களுக்கு கல்வி, நிலம் உள்ளிட்ட பல துறைகளில் அதிகாரம் வழங்க வகை செய்கிறது. இதனடிப்படையில் தமிழர் தாயக நிலத்தில் இருந்த வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் வடகிழக்கு மாகாண சபையாக உருமாறியது. அதன் முதல்வராக வரதராஜ பெருமாள் நியமிக்கப்பட்டார். வடகிழக்கு மாகாண சபையானது 2007-ல் வடக்கு, கிழக்கு மாகாண சபைகளாக மீண்டும் பிரிக்கப்பட்டன. ஆனால் இந்த அதிகாரப்பகிர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் முழுமையாக எதிர்த்தனர். அதேபோல் சிங்கள கட்சிகளும் எதிர்த்தன. ஆனால் ஈழத் தமிழர் அதிகாரம் பற்றி பேசுகிற ஒரே அரசியல் சட்டப் பிரிவாக 13-வது சட்டத் திருத்தம்தான் இருக்கிறது. இதனால் இந்தியாவும், இலங்கை அரசியல் சாசனத்தை ஏற்றுக் கொண்டு தேர்தலில் போட்டியிடுகிற கட்சிகளும் இந்த 13-வது திருத்தத்தை வலியுறுத்தி வருகின்றன.
பிரதமர் மோடிக்கு ஈழத் தமிழ் தலைவர்கள் எழுதிய கடிதம் முழு விவரம்:












Click it and Unblock the Notifications