அடடே சூப்பர்! இலங்கை வரை செல்லும் இந்திய ரூபாய்.. இலங்கை அரசு எடுத்த முக்கிய முடிவு! ஏன் முக்கியம்
கொழும்பு: இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், அந்நாட்டு அரசு இந்திய ரூபாயை உள்ளூரில் பயன்படுத்துவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
நமது அண்டை நாடான இலங்கையில் இப்போது மிக மோசமான சூழல் இருக்கிறது. கடந்தாண்டு உச்சம் தொட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதன் பிறகு கட்டுக்குள் வரவே இல்லை.

இதற்கிடையே அந்நிய செலாவணி இருப்பு இலங்கையில் மிக மோசமான நிலையில் இருக்கிறது. அங்கே ஆண்டு எந்தளவுக்கு நிலைமை மோசமானது என்பது அனைவருக்கும் தெரியும்.
இலங்கை ஆலோசனை: இந்தியா உட்பட உலக நாடுகள் இருந்து உணவுப் பொருட்கள், எரிபொருள் அனுப்பும் அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது. இதற்கிடையே நிலைமையைச் சமாளிக்க இலங்கையில் மக்கள் பயன்பாட்டிற்கு இந்திய ரூபாயைப் பயன்படுத்த அனுமதிப்பது குறித்து இலங்கை ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் நாணயத்தைப் பயன்படுத்த அனுமதிப்பதன் மூலம் இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் நேரடியாக ரூபாயைப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு முறையும் இந்திய ரூபாயை இலங்கை ரூபாய்க்கு மாற்றி சிரமத்தை எதிர்கொள்ளத் தேவையில்லை என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி நேற்று தெரிவித்தார்.
என்ன காரணம்: கடந்த 2021ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 5.45 பில்லியன் டாலராக இருந்தது. உணவு, மருத்துவ பொருட்கள், கட்டுமான பொருட்கள், வாகனங்கள், உரங்கள் மற்றும் ரசாயனங்கள் எனப் பல பொருட்களை இலங்கை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்கிறது.
இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தில் இலங்கை தான் இந்தியாவிடம் இருந்து அதிகம் இறக்குமதி செய்கிறது. எனவே, இந்தச் சூழலில் அவர்கள் இந்திய ரூபாயை ஏற்றுக்கொள்வது இலங்கைக்குச் சாதகமாக அமையும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் சப்ரி கூறினார். அவர் மேலும் கூறுகையில், "எங்களுக்கு அதிகளவில் இந்திய நாணயம் தேவை. எனவே, அதிக இந்தியர்கள் இங்கு வந்து இந்திய நாணயத்தைச் செலவிடுவது எங்களுக்கு நல்லதுதான்" என்றார்.
அதாவது இந்தியா ரூபாயின் பயன்பாட்டை அனுமதிப்பதன் மூலம் இந்திய ரூபாய் கையிருப்பை அவர்களால் அதிகரிக்க முடியும். இதன் மூலம் இந்தியாவில் இருந்து அதிகளவில் இறக்குமதி செய்ய முடியும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்தியாவுடன் ஒப்பந்தம்: முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு வந்திருந்தார். அப்போது இந்தியா- இலங்கை இடையே எரிசக்தி மற்றும் வர்த்தகம் எனப் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இது இலங்கையின் சிக்கலைச் சமாளிக்க ஓரளவுக்கு உதவும் என்றே கூறப்படுகிறது.
கடந்த 2022இல் இலங்கையில் மிக மோசமான பொருளாதார சிக்கல் ஏற்பட்டது. அங்கே நிலைமை எல்லாம் கையைவிட்டுப் போனது. அப்போது இந்தியா தான் உணவு, மருந்து மற்றும் எரிபொருள் என அண்டை நாடுகளுக்கு மொத்தம் 4 பில்லியன் டாலர் மதிப்புள்ள உதவிகளை இந்தியா வழங்கியது. மேலும், இலங்கையின் கடனை மறுசீரமைப்பு எழுத வேண்டும் என்று கடிதம் எழுதிய முதல் நாடும் இந்தியா தான்.
கடன்: நமது அண்டை மாநிலமான இலங்கைக்கு 41.5 பில்லியன் டாலர் வெளிநாட்டு தடன் மற்றும் 42.1 பில்லியன் டாலர் உள்நாட்டுக் கடன் என மொத்தம் 83 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது. அங்கே கடந்தாண்டு நிலைமை கையை மீறிச் சென்ற நிலையில், உலக நாடுகள் உதவ முன்வந்தன. இலங்கை நாட்டின் கடன் மறுசீரமைக்கப்பட்ட நிலையில், இப்போது தான் அவர்கள் மெல்ல இக்கட்டான நிலையில் இருந்து மீண்டு வருகின்றனர்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications