உதவி செய்ய முன்வந்த தமிழ்நாடு.. 12 ராமேஸ்வரம் மீனவர்களை சிறைபிடித்த இலங்கை ராணுவம்.. அட்டூழியம்!
கொழும்பு: தமிழ்நாட்டை சேர்ந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்களை சிறைப்பிடித்தது இலங்கை கடற்படை.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. கடந்த 70 வருடங்களில் இல்லாத மிக மோசமான நெருக்கடி இலங்கையில் நிலவி வருகிறது. உணவிற்கே பஞ்சம் ஏற்பட்டு மக்கள் சாலைகளில் கையேந்தும் அவலமும் இலங்கையில் ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் இலங்கையில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன. போராட்டங்களை தொடர்ந்து இலங்கையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உதவி
இலங்கையில் நிலவும் கடும் உணவு பஞ்சத்தை அடுத்து இந்திய அரசு சார்பாக இலங்கைக்கு 40 ஆயிரம் டன் உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதோடு மேலும் 2 பில்லியன் டாலர் வரை உதவிகள் இலங்கைக்கு செய்யப்பட உள்ளன. இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு உதவி செய்ய தமிழ்நாடு அரசும் முன் வந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்து இருக்கிறார்.

அத்துமீறல்
இலங்கையின் கடினமான காலத்தில் அந்நாட்டிற்கு உதவ தமிழ்நாடு அரசு தயாராகி உள்ள நிலையில்தான் தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்களை சிறைப்பிடித்தது இலங்கை கடற்படை. நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது சிறைப்பிடித்தது இலங்கை கடற்படை.

தடை காலம்
இன்னும் 10 நாட்களில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வர இருக்கிறது. இதனால் இப்போதே மீனவர்கள் பலர் மீன் பிடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். நேற்று காலை ராமேஸ்வரம் மீனவர்கள் பலர் 50 படகுகளில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை அவர்கள் ராமேஸ்வரம் திரும்பும் போது நெடுந்தீவு அருகே ஒரு படகை சுற்றி வளைத்த இலங்கை ராணுவம் அவர்களை சிறை பிடித்தது.

குறைவான மீனவர்கள்
ஒரு படகில் இருந்த 12 மீனவர்களை கைது செய்தது. ஏற்கனவே சிறை பிடிக்கப்பட்ட 26 மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டாலும், அவர்கள் இன்னும் இந்தியா திரும்பவில்லை. இந்த நிலையில்தான் மீண்டும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. முன்னதாக இலங்கை எல்லையில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களின் படகுகளை சேதப்படுத்த கூடாது என்று இந்திய உயர் கமிஷன் இலங்கை ராணுவத்திடம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications