இதுதான் முதுகெலும்பு! ஒரு விக்கெட் காலி.. அதிபர், பிரதமரை துணிச்சலாக சீண்டும் இலங்கை கிரிக்கெட்டர்ஸ்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையில் நடக்கும் போராட்டங்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு அளித்துள்ளனர். பிரபலமான கிரிக்கெட் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் பலர் துணிச்சலாக அரசுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர்.

இலங்கையில் போராட்டத்திற்கு இடையில் நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இதையடுத்து இத்தனை நாட்கள் அமைதியாக நடந்த போராட்டத்தில் நேற்று ராஜபக்சே ஆதரவாளர்கள் கலவரம் செய்தனர்.

பிரதமர் ராஜினாமா செய்த நிலையில் இந்த கலவரம் நடைபெற்றது. இதில் 8 பேர் வரை பலியானதாக கூறப்படுகிறது. ராஜபக்சே ஆதரவாளர்கள் உள்ளே புகுந்து மோதலில் ஈடுபட்டதுதான் கலவரத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

விமர்சனம்

இந்த நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை முன்னாள் வீரர் மஹிளா ஜெயவர்த்தனே விமர்சனம் செய்துள்ளார். அதில், இலங்கையில் அமைதியாக நடைபெற்ற போராட்டத்தில் அரசுக்கு ஆதரவாக குண்டர்கள் கலகம் செய்து தாக்குதல் நடத்துகிறார்கள். உங்களுடைய மோசமான செயல்களை உலகமே பார்த்துக்கொண்டு இருக்கிறது. சட்ட ஒழுங்கு எங்கே? இலங்கை போலீஸ் என்ன செய்கிறது.. அவர்கள் மக்களை பாதுகாக்காமல், சட்ட ஒழுங்கை பாதுகாக்காமல் என்ன செய்கிறார்கள் என்று மஹிளா ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார்.

விக்கெட் காலி

அதேபோல் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ததை இவர் வெகுவாக கொண்டாடி உள்ளார். ஒரு விக்கெட் காலி என்று இவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் போராட்டத்தின் பலம் இதுதான் என்று மஹிளா ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி போராடும் மக்களை தொடர்ந்து இவர் ஆதரித்து வருகிறார். அது தொடர்பான கருத்துக்களை தொடர்ந்து இவர் ரீட்விட் செய்து வருகிறார்.

சங்கக்கரா

இன்னொரு பக்கம் மூத்த வீரர் குமார் சங்ககராவும் இதேபோல் அரசுக்கு எதிராக போஸ்ட் செய்துள்ளார். அதில் மஹிந்த ராஜபக்சே அலுவலகத்தில் இருந்த குண்டர்கள்தான் கலவரத்தை நடத்தியது. அவர்கள் முதலில் அலுவலகத்திற்குள் சென்றுவிட்டனர். அதன்பின் அங்கிருந்து வெளியே வந்து மக்கள் மீது கலவரத்தை ஏவி விட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். இவரும் ஒருவிக்கெட் காலி என்று மகிந்த ராஜபக்சே ராஜினாமாவை கிண்டல் செய்துள்ளார்.

ரணதுங்கா

ரணதுங்கா

இன்னொரு பக்கம் இலங்கையின் வலிமையான முன்னாள் கேப்டன்களில் ஒருவரான அர்ஜுன ரணதுங்கா, இது மோசமான திட்டமிடப்பட்ட செயல். போலீசைத்தான் இதற்கு நான் காரணமாக சொல்வேன். அவர்கள் இதை மோசமாக கையாண்டு உள்ளனர். அவர்கள் இதை தடுத்து இருக்கலாம். மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பலர் குடித்து இருந்தனர். ஆனால் அவர்களை போலீஸ் தடுக்கவில்லை. மாறாக அமைதியாக போராடிய மக்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. அரசுக்கு ஆதரவான நபர்கள் சிலர்தான் கலவரத்தை தூண்டி உள்ளனர் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Recommended Video

    Politics பேசுவோம் | Hero-வாக பார்க்கப்பட்ட Mahinda Rajapaksa வீழ்ந்தது எப்படி?
    பாராட்டு

    பாராட்டு

    இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பலர் இப்படி அந்நாட்டு அரசை விமர்சனம் செய்துள்ளனர். அரசுக்கு ஆதரவாக இருந்தால் பதவி கிடைக்கும். பிரச்சனை வராது என்றெல்லாம் இவர்கள் நினைக்கவில்லை. நேரடியாக அதிபர், பிரதமர் பெயரை குறிப்பிட்டே இவர்கள் விமர்சனங்களை செய்கிறார்கள். இவர்களுக்கு முதுகெலும்பு இருக்கிறது. அவர்கள் மக்கள் பக்கம் இருக்கிறார்கள் என்று நெட்டிசன்கள் பலர் இலங்கை கிரிக்கெட் வீரர்களை பாராட்டி உள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+