வெளியேறுங்கள் ராஜபக்சே.. வீடு முன் குவிந்த மக்கள்.. இலங்கையில் வெடிக்கும் புரட்சி? ராணுவம் குவிப்பு
கொழும்பு: இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டிற்கு முன்பாக மக்கள் குவிந்து போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று மாலை தொடங்கிய போராட்டம் இலங்கை முழுக்க பல்வேறு நகரங்களுக்கு பரவி உள்ளது.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. கடந்த 70 வருடங்களில் இல்லாத மிக மோசமான நெருக்கடி நிலவி வருகிறது. இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 207.00 ரூபாயாக உள்ளது. சில இடங்களில் இது 250 ரூபாயை தாண்டி விற்கிறது
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு மின் தடையும் ஏற்பட்டுள்ளது. மின் உற்பத்தி நிலையங்களை இயக்க அங்கு போதிய நிலக்கரி இல்லை.

டீசல் தட்டுப்பாடு
அதோடு தற்போது டீசல் தட்டுப்பாடு காரணமாக அங்கு டீசல் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இலங்கையின் அந்நிய செலவாணி கையிருப்பு அதள பாதாளத்திற்கு சென்று உள்ளது. அத்தியாவசிய தேவைகளை இறக்குமதி செய்ய கூட இலங்கையில் போதிய நிதி இல்லாத கடுமையான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் இலங்கையில் ஆளும் அரசை எதிர்த்து கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த போராட்டங்கள் நடந்து வருகின்றன.

நேற்று போராட்டம்
நேற்று இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டிற்கு முன்பாக மக்கள் குவிந்து போராட்டம் நடத்தினார்கள். 2000 பேர் வரை அதிபர் வீடு முன் கூடி போராட்டம் செய்தனர்... ராஜபக்சே வெளியேறு.. மகிந்தா ராஜபக்சே வெளியேறு.. கோத்தபய ராஜபக்சே வெளியேறு என்று கூறி கோஷம் எழுப்பி போராட்டம் செய்தனர். மொத்தமாக பிரதமர் மகிந்தா, அதிபர் கோத்தபய, விவசாயத்துறை அமைச்சர் சமால், மற்றும் அமைச்சர் பேசில் ஆகிய மொத்த ராஜபக்சே குடும்பமும் பதவி விலக வேண்டும் என்று கூறி அங்கு போராட்டம் நடைபெற்றது.

தாக்குதல்
இதையடுத்து அங்கு குவிக்கப்பட்ட போலீசார் மற்றும் அவசர கால ராணுவத்தினர் தண்ணீர் புகை குண்டுகளை வீசி மக்களை கலைத்தனர். சிலரின் மீது அங்கு தடியடியும் நடத்தப்பட்டது. அங்கு துணை ராணுவப்படை, சிறப்பு ராணுவப்படை குவிக்கப்பட்டுள்ளது. இலங்கை முழுக்க இனி மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் புரட்சி வெடிக்கும் அளவிற்கு அங்கு மக்கள் சாலையில் இறங்கி கடுமையாக போரட்டங்களை செய்து வருகிறார்கள்.

ராஜபக்சே
ராஜபக்சேவின் மொத்த குடும்பமும் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே தற்போது மக்களின் குறிக்கோளாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அங்கு எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டு உள்ளன. பல்வேறு சாலைகளில் எண்ணெய் இல்லாமல் அரசு பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளன. தனியார் பேருந்துகளும் இயங்கவில்லை. மின்சார தடை 10 மணி நேரத்தில் இருந்து பல இடங்களில் 13 மணி நேரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
Recommended Video

சாலை விளக்குகள்
இதனால் சாலை விளக்குகள் அங்கு மொத்தமாக அணைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் அங்கு மருத்துவமனைகளிலும் கடுமையான மருந்து தட்டுப்பாடு உள்ளது. கெமிக்கல்கள் இல்லை, மயக்க மருந்து இல்லை, பல இடங்களில் சாதாரண மருந்துகள் கூட இல்லை என்ற நிலை நிலவுகிறது. இதனால் கொழும்பில் பெரிய மருத்துவமனைகள் பலவற்றில் சர்ஜரிகள், அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications