இனி ஓட முடியாது! மகிந்த ராஜபக்சே, மாஜி கூட்டாளிகள் 16 பேர் நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை!
கொழும்பு: இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, அவரது மகன் நாமல் ராஜபக்சே மற்றும் முன்னாள் அமைச்சர்கள் அந்நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இலங்கையில் மக்கள் புரட்சியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து வெளியேறினார் மகிந்த ராஜபக்சே. இதனையடுத்து மகிந்த ராஜபக்சே ஆதரவு அரசியல்வாதிகளை இலக்கு வைத்து பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர். மொத்தம் 100க்கும் அதிகமான ராஜபக்சே ஆதரவாளர்கள் வீடுகள் தீக்கிரையாகின.

இதனால் இலங்கையில் மகிந்த ராஜபக்சேவும் அவரது ஆதரவு மாஜி அமைச்சர்களும் நடமாட முடியாத சூழ்நிலை உருவானது. இதனையடுத்து மகிந்த ராஜபக்சே கொழும்பை விட்டு தப்பி ஓடி திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சமடைந்தார். அங்கிருந்து மகிந்த ராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதனை இலங்கை அரசு தரப்பு மறுத்து வருகிறது.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச , முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, நாமல் ராஜபக்ச, சஞ்சீவ எதிரிமன்ன, சி.பி.ரத்நாயக்க, சனத் நிஷாந்த மற்றும் காவல்துறை தலைவர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் இலங்கையை விட்டு வெளியே தடை விதிக்க கோரி வழக்கறிஞர்கள் சங்கம் கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த கோட்டை நீதிமன்ற நீதிபதி, மகிந்த ராஜபக்சே உள்ளிட்டோர் இலங்கையைவிட்டு வெளியேற தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
Recommended Video
இதனால் இலங்கையைவிட்டு மகிந்த ராஜபக்சேவும் அவரது கூட்டாளிகளும் இலங்கையை விட்டு தப்பி ஓட முடியாத நெருக்கடி நிலை உள்ளது. ஏற்கனவே கொழும்பில் வன்முறைகளை ஏவிவிட்டதற்காக மகிந்த ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் மகிந்த ராஜபக்சே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications