கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளினாலும் பிரதமர் பதவியை விட்டு போக மாட்டேன்...மகிந்த ராஜபக்சே அடம்!
கொழும்பு: எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் தாம் பதவியில் இருந்து விலகப் போவது இல்லை என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நிலைமை பேரழிவை எதிர்கொண்டிருக்கிறது. இலங்கையில் பொதுமக்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களை பெற முடியாமல் தத்தளித்து வருகின்றனர். அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து பல மடங்கு உயர்ந்து வருகிறது.

கடந்த சில வாரங்களாக இலங்கை முழுவதும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கொழும்பு காலிமுகத் திடலில் 18 நாட்களாக இரவும் பகலும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தற்போது ஜனாதிபதி, பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமாகி உள்ளது. மேலும் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது. இதன் முதல் கட்டமாக மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் மகிந்த ராஜபக்சேவோ, தாம் பிரதமர் பதவியில் இருந்து விலகவே முடியாது; என் தலைமையில்தான் இடைக்கால அரசாங்கம் அமையும் என திட்டவட்டமாக கூறியுள்ளார். இதற்கு பவுத்த பிக்குகள் உள்ளிட்ட பல தரப்பும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications