அய்யா பிரதமர் மோடி அவர்களே! என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றுங்க! ராஜபக்சே ஆதரவு எம்.பி கதறல்
கொழும்பு: இலங்கையில் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவு எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான விமலவீர திசநாயக்க தம்மை இந்தியாவுக்கு பாதுகாப்பு அழைத்துச் செல்ல வேண்டும் என இந்திய பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையில் மக்கள் புரட்சி வெடித்ததால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். அவருக்கு பதில் இடைக்கால புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றுள்ளார். ரணில் விக்கிரமசிங்கே தலைமையில் அனைத்து கட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த மே9-ந் தேதி புரட்சியில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது மகிந்த ராஜபக்சே ஏவிவிட்ட குண்டர்கள் கொடூரமான தாக்குதல் நடத்தினர். இதனால் கொதித்தெழுந்த மக்கள், நாடு முழுவதும் மகிந்த ராஜபக்சே ஆதரவு எம்.பிக்கள், அரசியல்வாதிகள் வீடுகள் வர்த்தக நிறுவனங்களை தீ வைத்து எரித்தனர். மகிந்த ராஜபக்சேவின் வீடுகள், பெற்றோரின் கல்லறைகளும் தகர்க்கப்பட்டன.
இதனால் கொழும்பைவிட்டு தப்பி ஓடி திருகோணமலையில் இலங்கை கடற்படையினரிடம் மகிந்த ராஜபக்சே தஞ்சமடைந்தார். அதேநேரத்தில் இலங்கையில் இருந்து தப்பி மாலத்தீவுகளில் உள்ள இந்திய தொழிலதிபருக்கு சொந்தமான சொகுசு விடுதியில் பதுங்கி இருந்தார் மகிந்த ராஜபக்சே எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்போது கொழும்புவுக்கு மீண்டும் மகிந்த ராஜபக்சே திரும்பி இருக்கிறார். அதேநேரத்தில் பொதுமக்கள் தங்களை தாக்கிவிடுவார்கள் என்பதற்காக ராஜபக்சே ஆதரவு எம்.பிக்கள் மாறுவேடத்தில் அந்நாட்டு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்றனர். தற்போது ராஜபக்சே ஆதரவு எம்.பி. ஒருவரின் கதறலான உருக்கமான வேண்டுகோள் கவனத்தை ஈர்த்துள்ளது.
ராஜபக்சேவின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான விமலவீர திஸாநாயக்க, இந்திய பிரதமர் மோடிக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், இலங்கை எம்.பிக்களுக்கு முறையான பாதுகாப்பு இதுவரையில் வழங்கப்படவில்லை; ஆகையால் என்னையும் என்னுடைய குடும்பத்தினரையும் இந்தியாவுக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பு வழங்க வேண்டும் என உருக்கமாக கேட்டுள்ளார் விமலவீர.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications