இலங்கை நாடாளுமன்றம் நாளை கூடுகிறது- 7 நாட்களில் புதிய ஜனாதிபதி தேர்வு: சபாநாயகர் மஹிந்த யாப்பா
கொழும்பு: இலங்கையின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வது தொடர்பாக நாடாளுமன்றம் நாளை கூடுகிறது. இன்னும் ஒரு வாரத்தில் இலங்கையின் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா தெரிவித்துள்ளார்.
இலங்கையைவிட்டு தப்பி ஓடிய கோத்தபாய ராஜபக்சே, சிங்கப்பூரில் இருந்து நேற்று இரவு தமது ராஜினாமா கடிதத்தை அனுப்பி இருந்தார். இந்த ராஜினாமா கடிதம் உண்மையானதுதான்; இதனை ஏற்றுக் கொள்கிறோம் என்று இன்று காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அறிவித்தார்.

இன்று காலை கொழும்பில் செய்தியாளர்களிடம் மஹிந்த யாப்பா கூறியதாவது: புதிய ஜனாதிபதி நியமனம் தொடர்பான நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடங்க உள்ளது. இதற்காக நாளை நாடாளுமன்றத்தைக் கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த 7 நாட்களில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் நாடாளுமன்ற நடைமுறைகள் முடிவு பெறும் என எதிர்பார்க்கிறோம். இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளின்படி புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க தேவையான நாடாளுமன்ற நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வதுதான் தங்களது பணி. இதற்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்கள் ஆதரவை வழங்க வேண்டும்.ஆகையால் ஜனநாயகத்தை நிலைநாட்ட அனைத்து தரப்பும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
மேலும் தெற்காசியாவின் பழமையான நாடுகளில் இலங்கை மிக முக்கியமானது. இலங்கையின் புதிய ஜனாதிபதி தேர்வானது உலக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமானதாகவும் இருக்க வேண்டும். ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுதந்திரமாக, மனசாட்சியுடன் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான அமைதியான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றார் சபாநாயகர் மஹிந்த யாப்பா.
முன்னதாக கோத்தபாய ராஜபக்சே அனுப்பிய ராஜினாமா கடித்த்தில் கையெழுத்து இடம்பெறவில்லை என ஒரு தகவல் பரவியது. இதனால் கோத்தபாயவின் ராஜினாமா கடிதம் ஏற்கப்படுமா? என்கிற கேள்வியும் எழுந்தது. ஆனால் சபாநாயகர், கோத்தபாயவின் ராஜினாமாவை ஏற்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
Recommended Video
இலங்கையின் இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே இன்று பதவியேற்பார்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கையின் தற்காலிக பிரதமராக பதவியேற்கக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications