இலங்கை: தற்காலிக ஜனாதிபதியாக ரணில் பதவியேற்றார்- ஜூலை 20-ல் புதிய ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு
கொழும்பு: இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபாய ராஜபக்சே ராஜினாமா செய்துவிட்டதை சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் தற்காலிக ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே இன்று பதவியேற்றார். இலங்கையின் புதிய ஜனாதிபதி தொடர்பான வாக்கெடுப்பு வரும் 20-ந் தேதி நடைபெறும்.
இலங்கையில் மக்கள் கிளர்ச்சியை தாங்க முடியாமல் நாட்டை விட்டு தப்பி ஓடினார் கோத்தபாய ராஜபக்சே. இலங்கையில் இருந்து மாலத்தீவுக்கு முதலில் தப்பி ஓடிய கோத்தபாய, அங்கிருந்து சிங்கப்பூர் சென்றுள்ளார். சிங்கப்பூரில் இருந்து சவுதிக்கு அகதியாக கோத்தபாய செல்லக் கூடும் என கூறப்படுகிறது.

அத்துடன் சிங்கப்பூரில் இருந்து தமது ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை இலங்கை சபாநாயகர் மஹிந்த யாப்பாவுக்கு கோத்தபாய அனுப்பி இருந்தார். இதனை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா இன்று அறிவித்தார். இதனையடுத்து நாட்டின் தற்காலிக ஜனாதிபதியாக, தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இன்று பதவியேற்றார். இலங்கை தலைமை நீதிபதி முன்னிலையில், தற்காலிக ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார்.
இந்நிலையில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய இலங்கை நாடாளுமன்றம் நாளை கூடுகிறது. இலங்கையில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு ஜூலை 20-ந் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக ஜூலை 19-ந் தேதி வேட்புமனுக்கள் பெறப்பட உள்ளது.
இலங்கை ஜனாதிபதி பதவி காலியானால் அதிகபட்சம் 1 மாதத்துக்குள் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய வேண்டும். ஜனாதிபதி பதவி காலியான உடனேயே 3 நாட்களில் நாடாளுமன்றம் முதலில் கூட்டப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி பதவி காலியாகிவிட்டதாக அறிவிப்பு வெளியிடப்படும்.
மேலும் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கும். ஜனாதிபதி பதவிக்கு யாரை முன்மொழிகிறோம் என எம்.பிக்கள் தெரிவிக்க வேண்டும். ஒருவருக்கு மேற்பட்டோர் முன்மொழியப்பட்டால் வாக்கெடுப்பு நடத்தப்படும். வேட்புமனுக்களைப் பெற்ற 48 மணிநேரத்துக்குள் வாக்கெடுப்புகள் நடத்த வேண்டும்.
ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பு நாடாளுமன்ற செயலாளர்தான் தேர்தல் அதிகாரியாக இருப்பார். புதிய ஜனாதிபதிக்கு தேர்தல் நடத்தப்பட்டால் எம்.பி.க்கள் வாக்குச் சீட்டில் வாக்குகளை செலுத்த வேண்டும். வாக்களிப்பு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணப்படும். அதனடிப்படையில் இலங்கையின் புதிய ஜனாதிபதி யார் என்பதும் அறிவிக்கப்படும்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications