இன்று இலங்கை ஜனாதிபதி தேர்வு-ராஜபக்சேக்களின் கூட்டாளி டலஸ் அழகப்பெருமவுக்கு ஈழத்தமிழ் கட்சிகள் ஆதரவு
கொழும்பு: இலங்கையில் இடைக்கால ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ளது. ரணில் விக்கிரமசிங்க, அனுர குமார திசநாயக்க, டலஸ் அழகப்பெரும ஆகியோர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுக்கின்றனர். டலஸ் அழகப்பெருமாவுக்கு பெரும்பாலான தமிழ் அரசியல் கட்சிகள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன. ராஜபக்சேக்களின் ஆதரவாளரான டலஸ் அழகப்பெருமாவை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரிப்பது சர்ச்சையாகி உள்ளது.
இலங்கையில் பொருளாதார சீரழிவை மேம்படுத்த முடியாமல் ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபாய ராஜபக்சே விலகினார். தற்போது சிங்கப்பூரில் பதுங்கி உள்ளார் கோத்தபாய ராஜபக்சே.

கோத்தபாய ராஜபக்சே பதவி விலகியதால் இலங்கையின் தற்காலிக ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார். இலங்கை அரசியல் சாசனப்படி, ஜனாதிபதி ஒருவர் பதவி விலகினால் அல்லது இல்லாமல் போனால் நாடாளுமன்ற எம்.பி.க்கள்தான் வாக்களித்து ஒருவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
இதனடிப்படையில் திங்கள்கிழமையன்று இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் வேட்புமனுக்கள் பெறப்பட்டன. ரணில் விக்கிரமசிங்கே, அனுர குமார திசநாயக்க, டலஸ் அழகப்பெரும ஆகியோர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர். இலங்கை எதிர்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச, கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகினார்.
இலங்கை நாடாளுமன்ற நியமன எம்.பி.யாக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கே ஏற்கனவே பிரதமராக நியமிக்கப்பட்ட போதே கடும் எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் கோத்தபாய ராஜபக்சே ராஜினாமாவா தற்காலிக ஜனாதிபதியானார் ரணில். அத்துடன் இலங்கையில் அவசரநிலையையும் ரணில் விக்கிரமசிங்கே பிரகடனம் செய்தார். இது பொதுமக்களை கடும் அதிர்ச்சியும் கோபமும் கொள்ள வைத்துள்ளது. ராஜபக்சே குடும்பத்தினரின் கூட்டாளியான ரணில் விக்கிரமசிங்கே எந்த அரசு பதவியும் வகிக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் வெடித்துள்ளன.
Recommended Video
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பில் டலஸ் அழகப்பெருமாவை ஆதரிப்பது என இலங்கை தமிழ் அரசியல் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. ஈழத் தமிழர் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்றது. அக்கூட்டத்தில் டலஸ் அழகப்பெருமாவுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் வாக்களிப்பது என முடிவு எடுக்கப்பட்டது. ராஜபக்சேக்களின் மிக தீவிரமான ஆதரவாளரான டலஸ் அழகப்பெருமாவை ஆதரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு பெரும் சர்ச்சையாகி உள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, சுயேட்சை எம்.பிக்கள் குழு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவை டலஸ் அழகப்பெருமாவை ஆதரிப்பது என முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications