Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிபராகும் கோத்தபய.. விரைவில் மகிந்த ராஜபக்சேவிற்கு பிரதமர் பதவி.. எச்சரிக்கும் வல்லுநர்கள்!

இலங்கையின் அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றபின் விரைவில் மகிந்த ராஜபக்சேவிற்கு உயர் பதவிகள் அளிக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மகிந்த ராஜபக்சேவிற்கு பிரதமர் பதவி - எச்சரிக்கும் வல்லுநர்கள்

    கொழும்பு: இலங்கையின் அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றபின் விரைவில் மகிந்த ராஜபக்சேவிற்கு உயர் பதவிகள் அளிக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. இன்று மாலைதான் அதிகாரபூர்வமாக தேர்தல் முடிவுகள் வெளியாகும்

    இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவி ஏற்க இருக்கிறார். ஏற்கனவே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நந்தசேனா கோத்தபய ராஜபக்சே தான் வெற்றிபெற்றுவிட்டதாக அறிவித்துவிட்டார்.

    உயர் பதவி

    உயர் பதவி

    இந்த நிலையில் இலங்கையின் அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றபின் விரைவில் மகிந்த ராஜபக்சேவிற்கு உயர் பதவிகள் அளிக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். அதன்படி பெரும்பாலும் இலங்கையின் பிரதமர் பதவிக்கு மீண்டும் ராஜபக்சே திட்டம் போடுவார் என்று கூறுகிறார்கள். இது தொடர்பாக அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கோத்தபய ராஜபக்சே ஆட்சி

    கோத்தபய ராஜபக்சே ஆட்சி

    கோத்தபய ராஜபக்சே ஆட்சிக்கு வந்தால் மகிந்தாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். விரைவில் இலங்கையில் அரசியல் மாற்றங்கள் நடக்கும். பிரதமர் ரணிலுக்கு ஆதரவு கம்மியாக இருக்கிறது. விரைவில் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ஆட்சி கவிழும் நிலை உருவாகும் என்கிறார்கள்.

    இதேபோல் முன்பு

    இதேபோல் முன்பு

    இதேபோல் கடந்த வருடம் அக்டோபர் மாதம் இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்தார். ரணில் விக்ரமசிங்கே அங்கு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் மகிந்த ராஜபக்சே தனது மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் பதவி விலக நேரிட்டது.

    சிறிசேனா எப்படி

    சிறிசேனா எப்படி

    அப்போது மைத்ரிபால சிறிசேனா செய்ததை ஆட்சிக்கு வந்ததும் கோத்தபய செய்ய வாய்ப்புள்ளது என்கிறார்கள். என்னவேண்டுமானாலும் நடக்கலாம் என்று அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் இலங்கை அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

    குடும்பம் எப்படி

    குடும்பம் எப்படி

    ஆனால் தன்னுடைய குடும்பத்தை அரசியலுக்குள் கொண்டு வர மாட்டேன் என்று கோத்தபய ராஜபக்சே பிரச்சாரத்தில் தெரிவித்தார். நான் என் குடும்பத்தில் யாருக்கும் உயர் பதவி வழங்க மாட்டேன் என்று கூறினார். ஆனால் குறைந்தபட்சம் மகிந்த ராஜபக்சே அரசை பின்னிருந்தாவது இயக்குவார் என்கிறார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+