இலங்கை தேர்தல்.. சஜித் பிரேமதாசவிற்கு தமிழர்கள் மாஸ் ஆதரவு.. வடக்கு மாகாணத்தில் கோத்தபய பின்னடைவு!
தமிழர்கள் அதிகம் இருக்கும் பகுதியான வடக்கு மாகாணத்தில் சஜித் பிரேமதாச முன்னிலை வகிக்கிறார்.
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர்கள் அதிகம் இருக்கும் பகுதியான வடக்கு மாகாணத்தில் சஜித் பிரேமதாச முன்னிலை வகிக்கிறார். வடக்கு மாகாணத்தில் கோத்தபய ராஜபக்சே பின்னடைவை சந்தித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் பதவிக் காலம் முடிந்ததால் அங்கு தேர்தல் நடந்துள்ளது. இதனால் இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்கு பதிவு முடிந்து நேற்று இரவில் இருந்து வாக்கு எண்ணும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அங்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சேவுக்கும் இடையில்தான் போட்டி நிலவுகிறது. நாளை மாலைக்குள் இந்த தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தமாக எப்படி
இந்த நிலையில் இலங்கை அதிபர் தேர்தலில் தற்போதைய நிலவரப்படி கோத்தபய ராஜபக்சே முன்னிலை பெற்றுள்ளார். சஜித் பிரேமதாசவை விட 90697 வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே முன்னிலை பெற்றுள்ளார். கோத்தபய ராஜபக்சே 1516260 வாக்குகள் பெற்றுள்ளார். சஜித் பிரேமதாச 14255623 வாக்குகள் பெற்றுள்ளார்.

எப்படி முன்னிலை
ஆனால் தமிழர்கள் அதிகம் இருக்கும் பகுதியான வடக்கு மாகாணத்தில் சஜித் பிரேமதாச முன்னிலை வகிக்கிறார்கள். அங்கு உள்ள மாவட்டங்களில் சஜித் பிரேமதாச அபார முன்னிலை பெற்றுள்ளார். கோத்தபய ராஜபக்சேவை விட சஜித் லட்சக் கணக்கான வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

என்ன ஆதரவு
தமிழரசுக் கட்சி உள்ளிட்டவை சஜித் பிரேமதாசவை ஆதரிக்கிறது. இவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்தனர். அதனால் தமிழர்கள் வாக்கு சஜித் பிரேமதாசவிற்கு அதிகமாக சென்றுள்ளது. உதாரணமாகயாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் சஜித் பிரேமதாச கோத்தபய ராஜபக்சேவை விட 2.40 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

ஆனால் என்ன
ஆனால் தெற்கு மாகாணங்களில் கோத்தபய ராஜபக்சே அதிக வாக்குகளை பெற்றுள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக அவர் முன்னிற்கு வகிக்கிறார். தமிழர்கள் அதிகம் வசிக்கும் கிளிநொச்சி மாவட்டத்தில் சஜித் பிரேமதாச - 55,585 வாக்குகள் பெற்றுள்ளார். கோத்தபய ராஜபக்சே வெறும் 3,238 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேறு எங்கு
அதேபோல் மன்னார் மாவட்டத்தில் சஜித் பிரேமதாச - 53,602 பெற்றுள்ளார். கோத்தபய ராஜபக்சே - 6,435 பெற்றுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் சஜித் பிரேமதாச - 47,594 பெற்றுள்ளார். கோத்தபய ராஜபக்சே - 4,252 பெற்றுள்ளார். வவுனியா மாவட்டத்தில் சஜித் பிரேமதாச - 65,141 பெற்றுள்ளார். கோத்தபய ராஜபக்சே - 13,715 பெற்றுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications