Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை நாடாளுமன்றத்தை கைப்பற்ற முயற்சி- போராட்டக்காரர்கள் மீது சரமாரி கண்ணீர்புகை குண்டுகள் வீச்சு!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையில் ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகத்தைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தைக் கைப்பற்ற படையெடுக்கின்றனர். இதனைத் தடுக்கும் வகையில் நாடாளுமன்றம் அருகே குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படையினர் சரமாரியாக கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்

Srilanka protesters to capture Parliament? US consulate stops services

இலங்கையில் ஜூலை 9-ந் தேதி ஜனாதிபதி மாளிகையை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் அலுவலகத்தையும் போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். ராணுவத்தின் கடும் அடக்குமுறையை மீறி பிரதமர் அலுவலகத்துக்குள் நுழைந்த கிளர்ச்சியாளர்கள் தேசியக் கொடியை பறக்கவிட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, போராட்டக்காரர்கள் பாசிசப் பாதையில் செல்கின்றனர். கடற்படை, விமானப் படை தளபதிகளின் வீடுகளையும் முற்றுகையிட திட்டமிட்டுள்ளனர்; அதனால்தான் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது என கூறியிருந்தார்.

Srilanka protesters to capture Parliament? US consulate stops services

இதனிடையே நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்கும் நடவடிக்கைகளை அதிவேகமாக முன்னெடுக்க வேண்டும்; அடுத்ததாக நாடாளுமன்றத்தையும் பொதுமக்கள் கைப்பற்றுவோம்; நாடாளுமன்றத்துக்குள் ஒரு எம்.பி.யும் உள்ளே நுழைய முடியாத வகையில் தடுத்து நிறுத்துவோம் என அறிவித்துள்ளனர்.

அத்துடன் ரணில் விக்கிரமசிங்கவால் அமல்ப்படுத்தப்பட்டுள்ள அவசரக்காலச் சட்டத்தை நாய்கூட மதிக்காது என்று அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே கூறியுள்ளார். ஆகையால் அவசரக்காலச் சட்டத்தை பொருட்படுத்த வேண்டாம் என்று பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறோம்; ரணிலும் பதவி விலக வேண்டுமென்றே மக்கள் போராடுகிறார்கள் என்றும் வசந்த முதலிகே தெரிவித்தார்.

Recommended Video

    மாலத்தீவில் அகதியாக கோத்தபாய- வெளியேற்ற வலியுறுத்தி, மாலேவில் இலங்கை மக்கள் போராட்டம்
    Srilanka protesters to capture Parliament? US consulate stops services

    மேலும் இலங்கையில் தொடர்ந்து அசாதாரண நிலைமை நீடிப்பதால் அமெரிக்கா தூதரகம் அடுத்த 2 நாட்களுக்கு மூடப்படும் என அறிவித்துள்ளது. இலங்கையில் இதே நிலைமை நீடித்தால் அரசாங்கம், பயங்கரவாத தடை சட்டத்தையும் ஏவிவிடக் கூடும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    Srilanka protesters to capture Parliament? US consulate stops services

    தற்போது போராட்டக்காரர்கள் அறிவித்தபடி நாடாளுமன்றத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர். நாடாளுமன்றத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் பாதுகாப்பை மீறி நாடாளுமன்றத்தை கைப்பற்றுவதற்கு போராட்டக்காரர்கள் முயற்சிக்கின்றனர். இதனைத் தடுக்க போராட்டக்காரர்கள் மீது இலங்கை ராணுவம் சரமாரி கண்ணீர்புகை குண்டுகளை வீசி வருகிறது. இதனால் கொழும்பில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+