கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குண்டுவெடிப்பு தொடர்பாக எதையும் நம்பவேண்டாம்.. அமைதியாக இருங்கள்.. அதிபர் சிறிசேனா வேண்டுகோள்

Google Oneindia Tamil News

Recommended Video

    அடுத்தடுத்து 8 குண்டு வெடிப்புகள், இலங்கையில் அவசர நிலை பிரகடனம்!

    கொழும்பு: இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பான புரளிகளை நம்ப வேண்டாம் என அதிபர் சிறிசேனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ஈஸ்டர் பண்டிகையையொட்டி, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி தேவாலயம் மற்றும் மட்டக்களப்பில் உள்ள தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அப்போது, பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்துச் சிதறியதில், பிரார்த்தனை செய்து கொண்டிருந்த பலர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

    இதேபோன்று சங்கிரில்லா நட்சத்திர ஹோட்டலின் 3வது மாடி, சின்னமன் கிரான்ட் மற்றும் கிங்ஸ்பெரி நட்சத்திர ஹோட்டல்களிலும் குண்டுகள் வெடித்தன. மொத்தம் 6 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் இதுவரை 172 பேர் கொல்லப்பட்டனர்.

    இலங்கை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது எப்படி?.. கார் கேமராவில் பதிவான சம்பவம்.. ஷாக்கிங் வீடியோ! இலங்கை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது எப்படி?.. கார் கேமராவில் பதிவான சம்பவம்.. ஷாக்கிங் வீடியோ!

    விசாரணை தீவிரம்

    விசாரணை தீவிரம்

    மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விசாரணை முடுக்கிவிடப்பட்டு உள்ளது. தொடர் குண்டுவெடிப்புகளால் கொழும்புவில் பதற்றம் நிலவுகிறது. இதனை அடுத்து, கொழும்பு விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    பொறுப்பேற்கவில்லை

    பொறுப்பேற்கவில்லை

    பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்க வில்லை. நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

    அதிபர் சிறிசேனா

    அதிபர் சிறிசேனா

    தொடர் பதற்றம் நிலவி வருவதால், அதிபர் மைத்திரிபாலா சிறிசேனா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். வெளிநாடு சென்றுள்ள நிலையில் குண்டு வெடிப்பு குறித்து அங்கிருந்து நாட்டு மக்களுக்கு சிறிசேனா உரை வெளியுட்டுள்ளார்

    புரளிகளை நம்பாதீர்

    புரளிகளை நம்பாதீர்

    அப்போது அவர் பேசியதாவது: இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக வரும் புரளிகளை யாரும் நம்ப வேண்டாம். நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். விரைவில் இதற்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்றார்.

    English summary
    Srilankan president maithripala sirisena addresses nation, appeals for calm.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X