செப்டம்பர் 21ல் இலங்கை அதிபர் தேர்தல்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
கொழும்பு: செப்டம்பர் 21 ஆம் தேதி இலங்கை அதிபர் தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் தேர்தல் நடந்த நிலையில் தற்போது 5 ஆண்டுகள் கழித்து மீண்டும் தேர்தல் நடைபெறுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வென்றார். அது போல் பிரதமராக மகிந்த ராஜ்பக்ச தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் 2022ஆம் ஆண்டு இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். விலைவாசி கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டே இருந்தது. பால், பிஸ்கெட் ஆகியவற்றின் விலையும் உயர்ந்தது. பெட்ரோல் போன்ற எரி பொருட்களை வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன.
நாடு முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. அதை எதிர்கொள்ள முடியாமல் அதிபரும் பிரதமரும் நாட்டைவிட்டே தப்பி சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து அதிபரும் பிரதமரும் பதவி விலகினர். பல ராஜபக்சவின் வீடுகளில் எல்லாம் தஞ்சமடைந்தனர். அவருடைய அதிபர், பிரதமர் இல்லங்களிலும் குடி போனார்கள். பிறகு இடைக்கால புதிய அதிபரார ரணில் விக்கிரமசிங்கேவும் பிரதமராக தினேஷ் குணவர்த்தனா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
பிறகு உலக நாடுகளின் உதவியால் இலங்கை மெல்ல மெல்ல மீண்டும் வருகிறது. இந்த நிலையில் அதிபர், பிரதமரின் பதவிக்காலம் வரும் நவம்பர் 17ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதனால் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16-க்குள் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் செப்டம்பர் 21 ஆம் தேதி இலங்கைக்கு புதிய அதிபருக்கான தேர்தல் நடைபெறும் என இலங்கை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்காக ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் வேட்புமனுக்கள் ஏற்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கையில் கடைசி கட்ட போரின் போது ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவும் போட்டியிடுகிறார்கள்.
இதுகுறித்து சரத்பொன்சேகா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 76 ஆண்டுகளாக ஊழல் கட்சிகள் இலங்கையை ஆட்சி செய்து மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தின. ஊழலை வேரறுக்க வேண்டும். இதற்காக அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications