இலங்கை: சரிந்த பொருளாதாரம்.. எழுந்த மக்கள் கோபம்.. விழுந்த சர்க்கார்! நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையில் கொரோனாவுக்கு பிறகு பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவித்தது முதல் இன்று பிரதமர் பதவியிலிருந்து ராஜபக்ச ராஜினாமா செய்தது வரை நடந்தது என்ன?

Recommended Video

    SriLanka நிலைமை இது தான் | தமிழர்கள் சாபம் சும்மா விடுமா? | Oneindia Tamil

    இலங்கையில் கொரோனா ஊரடங்கால் கடந்த 2019 ஆம் ஆண்டு முதலே சுற்றுலா துறை வெகுவாக பாதிக்கப்பட்டது. அது போல் தேயிலை ஏற்றுமதியும் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் வருமானம் இல்லாமல் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

    Timeline- Srilankas economic crisis was from 2019

    இலங்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகள்:

    நவம்பர் 2019- இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வென்ற பிறகு கோத்தபய ராஜபக்ச பெரும் வரி குறைப்புகளை அறிவித்தார்.

    2020- கொரோனா ஊரடங்கிற்கு பிறகு இலங்கையில் பொருளாதாரம் மோசமடைந்தது. சுற்றுலா துறை, ஏற்றுமதி வரி வருமானம் இழந்தது.

    29 ஏப்ரல் 2021- ரசாயன உரங்கள் மற்றும் பிற விவசாய ரசாயனங்கள் இறக்குமதி செய்வதை தடை செய்ய இலங்கை அரசு முடிவு செய்தது.

    நவம்பர் 2021- பெரும் எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து விவசாய உற்பத்தி குறைவதை கண்டு அரசு ஓரளவுக்கு தடையை நீக்கியது

    செப் 2, 2021- இலங்கையில் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளன நிலையில் அங்கு பொருளாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

    பிப்ரவரி 12- இலங்கையில் 4 அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு- ஒப்புக் கொண்ட நிதியமைச்சர்

    மார்ச் 15- இலங்கையில் ஒரு முட்டையின் விலை ரூ 28

    மார்ச் 22- இலங்கையில் 4 மாத குழந்தையுடன் தனுஷ்கோடி வந்த இலங்கை தமிழர்கள்

    மார்ச் 23- இலங்கை நெருக்கடி - ரணிலிடம் மன்னிப்பு கேட்ட கோத்தபய

    மார்ச் 30- இலங்கையில் 13 மணி நேர தினசரி மின்வெட்டு அமலானது.

    ஏப் 1- இலங்கை பொருளாதார நெருக்கடி: ஆயிரக்கணக்கில் கூடிய மக்கள் - நள்ளிரவில் வெடித்த வன்முறை

    ஏப். 2- இலங்கையில் அவசர நிலை பிரகடனம்

    ஏப். 3- இலங்கை ஊரடங்கை மீறி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தி போராட்டம்

    ஏப். 4- இலங்கை மத்திய வங்கி ஆளுநர் ராஜிநாமா

    இலங்கை நெருக்கடி: அடுத்தடுத்து 26 அமைச்சர்கள் பதவி விலகல்

    ஏப்.5 - நிதியமைச்சராக பதவியேற்று 24 மணி நேரத்தில் பதவி விலகிய இலங்கை அமைச்சர்

    சிட்னி, பாக்தாத், ஓஸ்லோ ஆகிய மூன்று நாடுகளில் உள்ள தூதரகங்களை மூடுகிறது இலங்கை - வெளியுறவுத்துறை

    இலங்கை ஜனாதிபதி செயலகம் முற்றுகை: விடிய விடிய மக்கள் போராட்டம்

    இலங்கை மத்திய வங்கிக்கு புதிய ஆளுநராக பதவியேற்கும் விழா நந்தலால் வீரசிங்க

    ஏப். 7- இலங்கைக்கு எரிபொருள் வழங்கி இந்தியா உதவி

    தமிழக மீனவர்கள் ஜாமீனில் வெளியேவர தலா ரூ.2 கோடி செலுத்த வேண்டும் - இலங்கை நீதிமன்றம்

    இலங்கை நாடாளுமன்றம் முன்பு மக்கள் போராட்டம்

    ஏப்.8 - இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் வெடிக்கும் போராட்டம்

    ராஜபக்ஷ ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற திட்டம்

    ஏப். 11- இலங்கை நெருக்கடி- மகிந்த ராஜபக்ச மவுனம் கலைத்தார்- காணொலியில் உரை

    இலங்கையில் இருந்து ஐந்து குடும்பங்களை சேர்ந்த 19 தமிழர்கள் அகதியாக தஞ்சம் கோரி தனுஷ்கோடி வருகை

    ஏப். 12- இலங்கை அரசு பணமதிப்பிழப்பு தீர்மானம் தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தல்

    இலங்கை மிகவும் இக்கட்டான சூழலில் உள்ளது"- மஹிந்த ராஜபக்ச

    ஏப். 13- இலங்கைக்கு 76 கோடி ரூபாய் வழங்கிய உலக வங்கி

    உலக வங்கி 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி

    ஜனாதிபதியை வெளியேற்ற மக்களால் அமைக்கப்பட்ட 'கோட்டா கிராமம்'

    ஏப். 14- இலங்கை புத்தாண்டை வீதிகளில் கொண்டாடிய மக்கள்

    ஏப் 15- இலங்கை தமிழர்கள் விவகாரம்- இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு மீண்டும் ஸ்டாலின் கடிதம்

    ஏப் 19- இலங்கை கேகாலை- ரம்புக்கனை வன்முறை போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி - 10 பேர் படுகாயம்

    ஏப் .20 -இலங்கை நெருக்கடி: போலீஸ் சுட்டதில் ஒருவர் பலி, பலர் படுகாயம்

    இலங்கையில் இருந்து குழந்தைகளுடன் தனியாக வந்த பெண் - இந்த தேதிக்கு இதுவரை 42 பேர் வருகை

    ஏப். 22- இலங்கையில் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற்ற லிட்ரோ நிறுவனம்

    ஒரே இரவில் 18 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சம்

    ஏப். 23- இலங்கையில் இடைக்கால அரசாங்கம் அமைந்தால் நானே தலைவன் - மகிந்த ராஜபக்ச

    இலங்கையுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்திய சீனா

    ஏப். 25- இலங்கையில் இருந்து மேலும் 15 தமிழர்கள் தனுஷ் கோடி வருகை

    ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ 1000 க்கு விற்பனை

    ஏப் 26- நான் பதவி விலக மாட்டேன்- இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்ச

    ஏப்.29- இலங்கைத் தமிழர்களுக்கு உதவ தனித் தீர்மானம் தமிழக சட்டசபையில் நிறைவேறியது

    இலங்கை மக்களுக்கு உதவிட அனுமதி - இந்திய பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

    மே 1- இலங்கை மக்களுக்கு உதவ நாங்கள் தயார்- ராமேஸ்வரம் மீனவர்கள்

    மே 2- இலங்கை நெருக்கடி- உணவு மருந்துகள் அனுப்பிய முதல்வர் ஸ்டாலினுக்கு இலங்கை எம்பிக்கள் நன்றி

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 இலங்கை தமிழர்கள் தமிழகம் வருகை

    மே 3 - இலங்கை மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள்- முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

    மே 3- இலங்கை மக்களுக்கு திமுக ஒரு கோடி நிதி - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

    மே 4- மகிந்த ராஜபக்சவின் அதிகாரப்பூர்வ இல்லமான அலரி மாளிகைக்கு முன்பாக நடத்தப்படும் போராட்டத்திற்கு தடை

    மே 5- இலங்கையில் எரிபொருள் நிரப்ப கடுமையாக்கப்படும் கட்டுப்பாடுகள்

    இலங்கைக்கு உதவி தமிழக முதல்வருக்கு ராஜபக்ச நன்றி

    மே 6- இலங்கையில் இன்று நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம்

    இலங்கையில் மீண்டும் அவசர நிலை பிரகடனம்

    மே 9: இலங்கை போராட்டத் திடலில் ராஜபக்ச ஆதரவாளர்கள் வன்முறை, தீ வைப்பு

    இலங்கை காலி முகத்திடலில் சஜித் பிரேமதாச மீது தாக்குதல்

    இலங்கை முழுவதும் ஊரடங்கு அமல், போலீஸ் ராணுவம் குவிப்பு

    இலங்கை பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபட்சே விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+