23 இந்திய பெருங்கடல் நாடுகளின் இலங்கை சங்கமம்- மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்-சீனாவுக்கு எதிராக வியூகம்?
கொழும்பு: இந்தியப் பெருங்கடல் எல்லை நாடுகளின் 23-வது கொழும்பு மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றுள்ளார்.
இந்திய பெருங்கடலில் சீனா: இந்திய பெருங்கடல்தான் 'அரசியல்' பதற்றம் குறைந்த பிராந்தியமாக இருந்து வருகிறது. இந்திய பெருங்கடலையும் சீனா விட்டு வைக்காமல் 'வல்லாதிக்க'த்துடன் விரிவாக்கத்தை முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது. தற்போது மாலத்தீவு நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் சேட்டைகளுக்கு அதிக வழியேற்படுத்தி தர இருக்கிறது. ஏற்கனவே இலங்கை, சீனாவின் காலனி நாடாக உருமாறிக் கொண்டிருக்கிறது. வங்கதேசத்திலும் சீனா கால்பதித்து நிற்கிறது.

23 நாடுகளின் கூட்டமைப்பு: இப்பின்னணியில் இந்தியப் பெருங்கடல் எல்லை நாடுகள் கூட்டமைப்பின் மாநாடு (Indian Ocean Rim Association IORA) கொழும்பில் நடைபெறுகிறது. இக்கூட்டமைப்பில் ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், கொமோரோஸ், இந்தியா, இந்தோனேசியா, ஈரான், கென்யா, மலேசியா, மடகாஸ்கர், மொரிஷியஸ், மொசாம்பிக், ஓமன், சீஷெல்ஸ், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, இலங்கை, தான்சானியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், சோமாலியா, மாலத்தீவுகள் மற்றும் ஏமன் ஆகிய 23 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டமைப்பானது 1997-ல் உருவாக்கப்பட்டது. இதன் நட்பு சக்தி நாடுகளில் சீனாவும் ஒன்று. 1995-ம் தென்னாப்பிரிக்கா அதிபராக இருந்த நெல்சன் மண்டேலாவின் இந்திய பயணத்தின் போது இத்தகைய ஒரு கூட்டமைப்பு உருவாக்குவதற்கான முதல் முயற்சி தொடங்கப்பட்டது.
23-வது மாநாடு: இந்திய பெருங்கடல் கூட்டமைப்பின் 23-வது மாநாடு கொழும்பில் நடைபெறுகிறது. இதில் 23 இந்திய பெருங்கடல் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இம்மாநாட்டில் பங்கேற்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்றடைந்தார். இந்த ஆண்டு இக்கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இலங்கை வகிப்பதால் கொழும்பில் இம்மாநாடு நடைபெறுகிறது.

ராஜ்நாத் சிங் பயணம் ரத்து: இலங்கையில் சீனாவின் மேலாதிக்கம் தலைதூக்கி இருக்கிறது. இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கையில் காலூன்றி நிற்கும் சீனா பேராபத்தாகவும் இருந்து வருகிறது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இலங்கைக்கு செல்ல இருந்த பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்திய பெருங்கடல் எல்லை நாடுகள் கூட்டமைப்பின் மாநாட்டில் பங்கேற்க கொழும்பில் முகாமிட்டுள்ளார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்.
திருகோணமலை: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இந்த பயணத்தின் போது இலங்கையில் தமிழர் தாயக நிலப்பகுதியான திருகோணமலைக்கும் செல்கிறார். அங்கு இந்தியா மேற்கொண்டு வரும் பல்வேறு பணிகளை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஆய்வு செய்ய இருக்கிறார். இந்த பயணத்தின் போது ஈழத் தமிழர் அரசியல் சார்ந்த சந்திப்புகளில் அமைச்சர் ஜெய்சங்கர் மேற்கொள்ளவில்லை என்கின்றன கொழும்பு செய்திகள்.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications