அழகிய சிரிப்பால் அலறவைத்த பெண்.. தாதாவை கோர்ட் அறையிலேயே சுட்டுக்கொன்ற பெண்.. யார் இந்த செவ்வந்தி?
கொழும்பு: இலங்கையின் நீதிமன்றத்தில் நிழல் உலக தாதாவை துப்பாக்கியால் சுட்டு கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் இஷாரா செவ்வந்தியை 8 மாதங்களுக்கு பிறகு நேபாளத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். கொலை செய்துவிட்டோம் என்ற குற்ற உணர்வு இன்றி முகத்தில் அழகான புன்னகையுடன் சினிமா நடிகை போல் காரில் அமர்ந்திருக்கும் இஷாரா செவ்வந்தியின் போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி பரவி வரும் நிலையில் அவரது ஷாக் பின்னணி பற்றிய திடுக்கி வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கை தலைநகராக கொழும்பு உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 20ம் தேதி கொழும்பு புதுக்கடைநீதிமன்றத்துக்கு பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நிழல் உலக தாதாவான கணேமுல்லா சஞ்சீவாவை போலீசார் அழைத்து வந்தனர். இவர் மீது போதைப்பொருள் கடத்தல், கொலை, சட்டவிரோத பணப்பரிமாற்றம் என்று பல வழக்குகள் உள்ளன.

நீதிமன்ற அறையில் குற்றவாளி கூண்டில் கணேமுல்லா சீஞ்சீவா நின்றார். அப்போது திடீரென்று வழக்கறிஞர்கள் அமர்ந்திருக்கும் இருக்கையில் இருந்த ஒருவர் துப்பாக்கியை எடுத்து கணேமுல்லா சஞ்சீவாவின் உடலில் குண்டு பாய்ந்தது. இதனால் அவர் சரிந்து விழுந்து துடிதுடித்து இறந்தார்.
இதற்கிடையே தான் துப்பாக்கியால் சுட்ட நபர் அங்கிருந்து தப்பியோடினார். நீதிமன்ற வளாகத்திலேயே இப்படியான கொலை நடந்து இருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின்படி தாதா கணேமுல்லா சஞ்சீவாவை, சமிந்து தில்ஷன் என்பவர் கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர் பந்தளம் பகுதிக்கு சென்று கொண்டிருந்த நிலையில் சோதனை சாவடியில் அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக நிழல் உலக தாதா கெஹல் பத்தர பத்மே மற்றும் 25 வயது இளம்பெண் இஷாரா செவ்வந்தி இருப்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே தான் கெஹல் பத்தர பத்மேவை போலீசார் கைது செய்தனர்.
ஆனால் இஷாரா செவ்வந்தி எங்கு சென்றார்? என்பது தெரியாமல் இருந்தது. இந்நிலையில் தான் 8 மாதங்கள் கழித்து நேபாளத்தில் பதுங்கியிருந்த இஷாரா செவ்வந்தி உள்பட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த நிழல் உலக தாதா கணேமுல்லா சஞ்சீவாவுக்கும், இன்னொரு நிழல் உலக தாதாவான கெஹல்பத்தரா பத்மேவுக்கும் முன்விரோதம் இருந்தது. இதனால் கெஹல் பத்தர பத்மே துபாயில் இருந்தே கணேமுல்லா சஞ்சீவாவை கொல்ல முடிவு செய்தார். குற்ற வழக்கு விசாரணைக்காக கணேமுல்லா சஞ்சீவாவை போலீசார் அழைத்து வரும்படி தீர்த்து கட்ட திட்டமிட்டார்.
இதற்காக அவர்கள் சமிந்து தில்ஷன், இஷாரா செவ்வந்தி உள்ளிட்டவர்களை நீதிமன்றத்துக்கு அனுப்பினார். அவர்கள் வழக்கறிஞர் உடையில் நீதிமன்றத்துக்குள் நுழைந்து கணேமுல்லா சஞ்சீவாவை சுட்டுக்கொன்றுள்ளனர். நீதிமன்றத்துக்குள் இஷாரா செவ்வந்தி துப்பாக்கியை எடுத்து வந்துள்ளார். இவர் சட்ட புத்தகத்தின் நடுவில் உள்ள பக்கங்களை கிழித்து பள்ளம் உருவாக்கி அதனுள்ளே துப்பாக்கியை மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளார்.
அதன்பிறகு துப்பாக்கியை சமிந்து தில்ஷனிடம் வழங்கினார். இருவரும் நீதிமன்றம் இருக்கையில் அமர்ந்திருந்தனர். இஷாரா செவ்வந்தி கொலை பற்றி கெஹல் பத்தர பத்மேவை செல்போனில் தொடர்பு கொண்டு நீதிமன்றத்துக்குள் வந்ததை கூறியுள்ளார். இந்த வேளையில் சமிந்து தில்ஷன், கணேமுல்லா சஞ்சீவாவை நீதிமன்ற அறையில் சுட்டு கொன்றுவிட்டார்.
அதன்பிறகு இருவரும் துணிக்கடைக்கு சென்று உடைகளை மாற்றி கொண்டு நீர்கொழும்பு பகுதிக்கு சென்றனர். அங்கிருந்து இருவரும் பிரிந்தனர். இஷாரா செவ்வந்தி 8 மாதங்களாக தலைமறைவாக இருந்தார். 200க்கும் மேற்பட்ட சோதனைகளை நடத்தி 14 தனிப்படை போலீசாரை வைத்து தேடினோம். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இதற்கிடையே தான் அவர் இலங்கையில் இருந்து இந்தியா சென்று அங்கிருந்து நேபாளத்தில் பதுங்கியது தெரியவந்தது. நேபாளத்தில் அவர் போதைப்பொருள் கும்பலுடன் தலைமறைவாக இருந்தது. அவரது இருப்பிடத்தை இண்டர்போல் மூலமாக அறிந்து கைது செய்துள்ளோம். இஷரா செவ்வந்தியுடன் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்னர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை தேடிவருகிறோம்'' என்று கூறினர்.
ஆனால் இப்படி கொடூரமாக கொலை செய்த இஷாரா செவ்வந்தி குற்ற உணர்ச்சி இன்றி சாதாரணமாக போலீஸ் வாகனத்தில் வலம் வருகிறார். நேபாளத்தில் இருந்து அவரை விமானத்தில் இலங்கைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவர் சிரித்தபடி இருந்தார். அதேபோல் காரில் நீதிமன்றம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோதும் அவர் ஹேப்பியாக சிரிக்கிறார். பார்க்க சினிமா நடிகை போல் அவர் உள்ளதால் இணையதளங்களில் வீடியோ வெளியானது. இதையடுத்து அவரது பின்னணியை தேடிய பலருக்கும் இந்த கொலை வழக்கு செய்தி தான் கிடைத்துள்ளது. அது அனைவரையும் அதிர வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications