மூச்சுமுட்ட குடி.. போதையில் அங்கன்வாடி மையம் முன்பு விழுந்து கிடந்த சமையலர் கும்பகோணம் மீனாட்சி
கும்பகோணம்: கும்பகோணத்தில் குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் பணியாற்றும் பெண் சமையலர் மதுபோதையில் வந்து அங்கன்வாடி மையம் முன்பு விழுந்து கிடந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Recommended Video
கும்பகோணம் அருகே அண்ணலக்ரஹாரம் ஊராட்சி அரியதிடல் கிராமத்தில் உள்ள குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் மாத்தி கீழத் தெருவை சேர்ந்த மீனாட்சி என்ற பெண் சமையலராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை அங்கன்வாடிக்கு சமையல் வேலைக்கு வந்த மீனாட்சி மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. மதுபோதை தலைக்கு ஏறியதால் மீனாட்சி நடக்க முடியாமல் தள்ளாடியபடி அங்கன்வாடி மையம் முன்பு அமர்ந்துள்ளார்.

யார் வேலை கொடுத்தார்கள்
இதனை பார்த்த அங்கு பணியாற்றும் ஆசிரியர், உங்களுக்கு யார் வேலை கொடுத்தார்கள்? இந்த நிலையில் சமைக்க வந்தீர்களா? ஏதோ ஆசிரியர்கள்தான் சரியாக வேலை செய்யவில்லை என புகார் அளித்தீர்களே. இப்போது நிதானம் தெரியாமல் இருக்கிறீர்களே? உங்களை அழைத்துச் செல்ல உங்கள் கணவர் வருவாரா? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.

மது போதை
ஆனால் அதற்கு எதுவும் பதில் சொல்ல முடியாத அளவிற்கு நிதானமின்றி மது போதையில் இருந்ததாக தெரிகிறது. செல்போன் அழைப்பை எடுக்க முடியாத அளவிற்கு போதை அவரை ஆட்கொண்டது. இதுகுறித்து தகவலறிந்து அங்கன்வாடி மேற்பார்வையாளர் ஜெயந்தி, தமிழ்ச் செல்வி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

மீனாட்சி மீது புகார்
அப்போது அங்கிருந்த குழந்தைகளின் பெற்றோர், மீனாட்சி மீது புகார் தெரிவிக்கவே அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் அங்கன்வாடி மையம் முன்பே மதுபோதையில் படுத்துவிட்டார். இவர் ஏற்கனவே கடந்த மாதம் 12-ம் தேதி இதேபோல் மது போதையில் அங்கன்வாடிக்கு சமையல் பணிக்கு வந்ததாகவும், அதனை அறிந்த அதிகாரிகள் அங்கன்வாடிக்கு வந்து அவரை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

பணியாளர்கள்
இதையடுத்து கடந்த ஒரு மாத காலமாக அவர் பணிக்கு வரவில்லை எனவும், இந்நிலையில் இன்று காலை மீண்டும் குடித்துவிட்டு 9 மணிக்கு வர வேண்டிய வேலைக்கு 11 மணிக்கு மீனாட்சி வந்துள்ளதாகவும், இதுபோன்ற பணியாளர்களை பார்த்து தங்கள் குழந்தைகள் கெட்டு விடும். மேலும் அவர் குடித்துவிட்டு சமைப்பதால் நிதானமின்றி உணவில் எதனை சேர்கிறார் என்பது அவருக்கே தெரியாது. அது எங்கள் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications