கடலூரை கலக்கிய கல்யாண ராணி.. 58 வயசில் கல்யாணம் செய்தும், கலங்கிய கறிக்கடைக்காரர்.. லிஸ்ட் பெருசு
கடலூர்: திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக சொல்வார்கள்.. ஆனால் திருமணம் என்பது பணத்தில் தான் நிச்சயிக்கப்படுவதாக ஏழைகள் சொல்வார்கள். பணக்காரர்கள் அழகில் தான் நிச்சயிக்கப்படுவதாக சொல்வார்கள். வசதி உள்ளவர்களுக்கு அழகு இல்லை என்றும், வசதி இல்லாதவர்களுக்கு பணம் இல்லை என்றும் திருமணம் நடப்பது இல்லை. இதை பயன்படுத்தி சில பெண்கள் ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார்கள்.. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த பெண் ஆறு பேரை திருமணம் செய்து, பணம், நகையை வாங்கி ஏமாற்றியதாக சிக்கியுள்ளார்.
சில பெண்கள் பணம், நகைக்கு ஆசைப்பட்டு, திருமணம் செய்கிறார்கள். திருமணம் முடிந்து சில மாதங்கள் வாழும் அவர்கள், அவர்களிடம் நகை பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடிவிடுகிறார்கள். வேறு ஒரு ஊரில், அதேபோல் ஒரு வயதானவரை ஏமாற்றி திருமணம் செய்து அவரிடமும் பணம் நகையை வாங்கி ஏமாற்றுகிறார்கள்.. அப்படி ஏமாற்றிய பெண்கள் அண்மைக்காலங்களில் கைதாகி வருகிறார்கள். அந்த வகையில் விருத்தாசலத்தைச் சேர்ந்த 40 வயது பெண் மீது ஆறு பேரை திருமணம் செய்து ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

58 வயதாகும் கறிக்கடைக்காரர்
சென்னையில் 58 வயதாகும் நபர் ஒருவர் கறிக்கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டுக்கு கடந்த 2 ஆண்டுக்கு முன்பு வீட்டு வேலை செய்வதற்காக கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த 40 வயதுடைய பெண் வந்தாராம். அப்போது கறிக்கடைக்காரருக்கும், அந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டார்களாம்.
ஆறு லட்சம் பணம்
58 வயதாகும் கறிக்கடைக்காரர் தனது மனைவியாக வந்த விருத்தாசலம் பெண்ணுக்கு ரூ.6 லட்சம் ரொக்கம்,, 8 பவுன் தங்க நகை, ½ கிலோ வெள்ளிப்பொருட்கள், வெள்ளி கொலுசு, ஸ்கூட்டர் ஆகியவை கொடுத்தாராம். இவை அத்தனையும் பெற்ற அவர் 3 மாதம் மட்டுமே கறிக்கடைக்காரருடன் குடும்பம் நடத்தினாராம். பின்னர் அவருடன் தகராறு செய்து விட்டு நகை, பணத்தை சுருட்டிக்கொண்டு விருத்தாசலத்துக்கு வந்துவிட்டாராம்.
பணத்தை தர மறுப்பு
இதனை தொடர்ந்து கடந்த 20-ந் தேதி கறிக்கடைக்காரர், விருத்தாசலத்துக்கு வந்து தான் வாங்கிக்கொடுத்த நகை, பணத்தை திருப்பி தருமாறு அந்த பெண்ணிடம் கேட்டாராம். அதற்கு அந்த பெண், நகை மற்றும் பணத்தை தர முடியாது என மறுத்ததுடன், தனது மகன்களை வைத்து கறிக்கடை உரிமையாளரை திட்டி, தாக்கி, கழுத்தில் கத்தி வைத்து கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் கறிக்கடைக்காரர் புகார் கொடுத்தார்.
ஆறு பேர் ஏமாந்துள்ளோம்
இந்த சம்பவம் குறித்து கறிக்கடைக்காரர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தனக்கு கணவர் கிடையாது என்றும், உங்களோடு வாழ்ந்து விடுகிறேன் என்றும் அந்த பெண் என்னிடம் தெரிவித்தார். அதை நம்பி நான், அந்த பெண்ணை திருமணம் செய்தேன். ஆனால் அவர் என்னிடம் நகை, பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டார். இங்கு வந்து விசாரித்தபோதுதான் என்னை போன்று மேலும் 5 பேரை அந்த பெண் திருமணம் செய்து கொண்டு நகை, பணத்தை சுருட்டியது தெரிந்தது" என்றார்.
யார் யார் தெரியுமா
விருத்தாசலம் பெண் மீது சென்னை கறிக்கடைக்காரர் மட்டுமல்ல, பண்ருட்டியை சேர்ந்த 3 பேர், விழுப்புரத்தை சேர்ந்த 35 வயதுடைய வாலிபர், திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவர் என 5 பேரும் விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் கொடுத்தனர். அந்த புகாரில், தங்களை திருமணம் செய்து கொண்டு நகை, பணத்தை சுருட்டியதாகவும், தற்போது அந்த பெண் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகில் உள்ள ஒரு டீ கடையில் வேலை செய்து வருவதாகவும், அவரை பிடித்து விசாரணை நடத்தி நகை மற்றும் பணத்தை மீட்டு தருமாறும் கூறினார்கள்.
அதன்பேரில் விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் ஒருவர் 6 பேரை திருமணம் செய்து நகை, பணத்தை சுருட்டிய சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications