கடலூரை உலுக்கிய மந்திரவாதி.. இளம் பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து.. நைசாக பேசி.. பரபர சம்பவம்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூரை சேர்ந்த ஒருவர் தன்னை மந்திரவாதி என்று சொல்லிக்கொண்டு அங்கு கிராமம் ஒன்றில் செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் அங்கு கட்டிட பணியாளராக இருக்கிறார். அவர் சில வருடங்களுக்கு முன் விஜயஸ்ரீ என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் விஜய் ஸ்ரீக்கு அடிக்கடி கெட்ட கனவு வரும் பிரச்சனை இருந்துள்ளது. இரவில் திடீரென மோசமான பேய் கனவு வந்து பல மாதங்களாக அவதிப்பட்டு வந்து இருக்கிறார். இப்படி கனவு வருவது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

மந்திரவாதி

மந்திரவாதி

இந்த நிலையில் விஜயஸ்ரீ வீட்டிற்கு நேற்று மந்திரவாதி ஒருவர் வந்து இருக்கிறார். உங்களுக்கு அடிக்கடி கெட்ட கனவு வருவதாக உங்கள் கணவர் என்னிடம் சொன்னார்.. உங்களுக்கு பேய் பிடித்து இருக்கிறது. இரவில் மட்டும் அந்த பேய் உங்களை வந்து தொல்லை செய்கிறது. கவலை வேண்டாம் உடனேயே பேயை ஓட்டி விடலாம் என்று மந்திரவாதி கூறி இருக்கிறார். கெட்ட கனவால் கஷ்டப்பட்ட அந்த பெண்ணும் இதை நம்பி பேயை ஓட்ட ஒப்புக்கொண்டுள்ளார்.

பாத்திரம்

பாத்திரம்

இதையடுத்து ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வர சொல்லி அந்த பெண்ணுக்கு போலி மந்திரவாதி உத்தரவிட்டுள்ளார். அந்த பெண்ணும் தண்ணீர் கொண்டு வர.. நம்ம மந்திரவாதி.. க்ரீம் க்ரீம்.. என்று ஏதேதோ மந்திரங்களை சொல்லி அந்த பெண்ணை பயமுறுத்தி உள்ளார். அதோடு அந்த தண்ணீரில் சாம்பலை போட்டு பெண்ணின் மூஞ்சில் அடித்து உனக்கு பேய் இனி இல்லை.. உன்னைவிட்டு போய்விட்டது என்று கூறியுள்ளார்.

நகைகள்

நகைகள்

இதையடுத்து அந்த பெண்ணும் நிம்மதி அடைந்து இருக்கிறார். இந்த நிலையில்தான் அந்த மந்திரவாதி குண்டை தூக்கி போட்டுள்ளார். உன்னிடம் பேய் இல்லை. நீ அணிந்து இருக்கும் நகைகளில் பேய் ஒட்டி இருக்கும். அதை ஓட்டவில்லை என்றால் மீண்டும் இரவில் உன்னை அது பிடித்துக்கொள்ளும் என்று பயமுறுத்தி இருக்கிறார். இதனால் அந்த நகைகளை சாம்பல் தண்ணீரில் போடும்படி கூறியுள்ளார்.

பயம்

பயம்

முதலில் இதற்கு மறுத்த அந்த பெண் பின்னர் பயந்து கொண்டே நகைகளை போட்டுள்ளார். அந்த நேரம் பார்த்து பேய் ஓடிவிட்டது. நீங்கள் போய் முகத்தை கழுவிட்டு வாருங்கள் என்று கூறியுள்ளார். அந்த சாமியாரையும் நம்பி, அந்த பெண் வீட்டிற்கு பின்னே முகம் கழுவ சென்றுள்ளார். ஆனால் அதற்குள் மந்திர வாதியோ நகையை எடுத்துக்கொண்டே எஸ்கேப் ஆகிவிட்டார். திரும்பி வந்த பெண் "அப்படியே ஷாக் ஆகிட்டேன்" என்று மலைத்து நின்றுள்ளார். 6 பவுன் தாலி சங்கிலி, காதுகளில் இருந்ததோடு, வளையல் என்று கிட்டத்தட்ட 8 பவுன்களை அந்த பெண் இழந்துள்ளார்.

எவ்வளவு நகை

எவ்வளவு நகை

வீட்டிற்கு வந்த கணவரிடம் விசாரித்ததில், நான் மந்திரவாதி யாரையும் அனுப்பவில்லை என்று கூறியுள்ளார். இது குறித்து கடலூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அந்த பெண்ணுக்கு கெட்ட கனவு வரும் பிரச்சனை எப்படி அந்த சாமியாருக்கு தெரிந்தது.. இந்த விஷயம் தெரிந்த யாரோ ஒருவர்தான் இதை செய்திருக்க வேண்டும். அந்த பெண்ணுக்கோ, அல்லது கணவருக்கோ நெருக்கமான யாரோ ஒருவர்தான் இதை செய்து இருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+