கடலூரில் நகை தொழிலாளி கனவில் கூட நினைக்காத ட்விஸ்ட்.. 22 லட்சம் மதிப்புள்ள நிலம் நொடியில் போயிடுச்சு
கடலூர்: ஸ்ரீமுஷ்ணம் அருகே சாவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த சண்முகவேல் என்பவர் ராசி கற்கள் பதித்த மோதிரங்கள் விற்கும் வியாபாரி ஆவார். இவர் விழுப்புரம் ஜனகராஜ் நகரை சேர்ந்த நகை தொழிலாளியான குமார் என்பவரிடம் ரூ.23 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தர வேண்டிய கடனுக்கு பதில் இடத்தை கிரையம் செய்து கொடுக்க கேட்டிருக்கிறார் குமார்..அதன்படி இடத்தை கிரயம் செய்து கொடுத்துள்ளார். இதனிடையே பணத்தை தருவதாக மறு கிரையம் செய்ய வைத்து சண்முகவேல் ஏமாற்றினாராம்.இதில் என்ன நடந்தது என்று பார்ப்போம்.
இன்றைக்கு நம்பிக்கையின்அடிப்படையில் கடன்கள் தரப்படுவது இல்லை. இடம் அல்லது வீடு இருந்தால் கடன் கொடுப்பவர்களின் பெயரில் கிரயம் செய்து கொடுக்க வேண்டும். அப்படி கிரயம் செய்து கொடுத்த பின்னர் மாதம் மாதம் வட்டி வசூலிப்பார்கள் அத்துடன் மொத்தமாக கடனை திரும்ப செலுத்த வேண்டும். அப்படி செலுத்தினால் மட்டுமே சொத்தை மறுகிரயம் செய்து கொடுப்பார்கள்.

இந்த செலவுகளை எல்லாம் கடன் வாங்கியவர்களே ஏற்க வேண்டும் என்று எழுதப்படாத விதியாக உள்ளது. இதில் கிரயம் செய்து கொடுத்தவர்கள் ஏமாற்றுவது அடிக்கடி நடக்கிறது. கிரயம் எழுதி வாங்கியவர்களும் ஏமாறும் சம்பவங்களும் நடக்கிறது.. கடலூரில் சொத்தை மறுகிரயம் எழுதி வாங்கியவர் 22 லட்சத்தை ஏமாந்துள்ளார்.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்...
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே சாவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவருடைய மகன் சண்முகவேல் (வயது 35). இவர் அந்த பகுதியில் ராசி கற்கள் பதித்த மோதிரங்கள் விற்கும் வியாபாரி ஆவார்.இதேபோல் விழுப்புரம் ஜனகராஜ் நகரை சேர்ந்த நகை தொழிலாளி குமார் (45). சண்முகவேல் குமார் ஆகிய இருவருக்கும் இடையே வணிகம் காரணமாக கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் குமாரிடம், சண்முகவேல் வியாபாரம் தொடர்பாக ரூ.23 லட்சத்து 50 ஆயிரம் கடன் வைத்திருக்கிறார். இதையடுத்து குமார், சண்முகவேலிடம் எனக்கு தரவேண்டிய கடனுக்கு பதில் உனது தந்தை ராஜசேகருக்கு சொந்தமான 23 சென்ட் நிலத்தை எனக்கு கிரையம் செய்து கொடு, பிறகு கடனை திருப்பி கொடுத்ததும் நிலத்தை மறுகிரையம் செய்து தருவதாக கூறியிருக்கிறார்.
அதன்படி குமாருக்கு இடம் கிரையம் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சண்முகவேல் தனது நண்பர்களான ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் அசோக்குமார் (29), முத்தையன் மகன் ஆனந்தன் (38), தண்டபாணி மகன் பிரபாகரன் (28), அள்ளூர் கிராமத்தை சேர்ந்த மணி மகன் வெங்கடேசன் (39) உள்ளிட்ட சிலரிடம் மொத்தம் ரூ.22 லட்சத்து 25 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
பின்னா் நிலத்தை மறுகிரையம் செய்து தர வருமாறு குமாரை, சண்முகவேல் அழைத்தார். இதையடுத்து குமார் தனது உறவினர்களுடன் ஸ்ரீமுஷ்ணம் வந்தார். இதையடுத்து ஸ்ரீமுஷ்ணம் கடைவீதியில் பத்திர ஆவண எழுத்தகம் வைத்து நடத்தி வரும் வக்கீல் அய்யப்பன் என்பவர் கிரைய பத்திரம் தயார் செய்திருந்தாக கூறப்படுகிறது. அங்கு பூமாலை கேசவன் முன்னிலையில் ரூ.22 லட்சத்து 25 ஆயிரத்தை சண்முகவேல், குமாரிடம் வழங்குவதற்காக அங்கிருந்த முக்கிய பிரமுகர்களிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் ரூ.70 ஆயிரத்தை வங்கி கணக்கில் இருந்து 'ஜி பே' மூலம் பூமாலை கேசவனுக்கு அனுப்பி வைத்தாகவும் கூறப்படுகிறது. மீதி பணத்தை ஏற்பாடு செய்து தருவதாக கூறினாராம்.
இதையடுத்து சார்-பதிவாளர் அலுவலகம் சென்ற குமார், சண்முகவேலும் அவரது 4 நண்பர்களும் கூறியபடி, ஏற்கனவே தான் கிரையம் பெற்ற 23 சென்ட் இடத்தை சண்முகவேலின் நண்பரான அசோக்குமாருக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் தனக்கு சேர வேண்டிய தொகையை பெறுவதற்காக குமார் கடைவீதியில் உள்ள பத்திர ஆவண எழுத்தகத்துக்கு வந்துள்ளார். அப்போது அங்கு தனது ஆதரவாளர்கள் சிலருடன் வந்த சண்முகவேல் வியாபார வரவு, செலவு கணக்கில் நமக்குள் பல சிக்கல்கள் இருப்பதால் அவற்றை தீர்த்த பிறகு தான் பணத்தை பெற்றுச் செல்ல வேண்டும் என கூறி தகராறு செய்தாராம். மேலும் அவர் அங்கிருந்த ரூ.22.25 லட்சம் அடங்கிய பணப்பையை எடுத்துக்கொண்டு தப்பிவிட்டாராம்.
இதுகுறித்த குமார் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் வீரசேகர் தலைமையிலான போலீசார் சண்முகவேலின் நண்பர்களான அசோக்குமார், ஆனந்தன், வெங்கடேசன், பிரபாகரன் ஆகிய 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் சண்முகவேல், அசோக்குமார் உள்ளிட்டவர்களுடன் சேர்ந்து குமாரிடமிருந்து இடத்தை கிரையம் பெற்றுக் கொண்டு, பணத்தை கொடுக்காமல் ஏமாற்ற சதித்திட்டம் தீட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அசோக்குமார், ஆனந்தன், வெங்கடேசன், பிரபாகரன் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பணத்துடன் தப்பிச்சென்ற சண்முகவேல் மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் தேடி வருகிறர்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications