போலீசார் அனுமதி மறுத்த நிலையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய அதிமுக எம்.எல்.ஏ.. நெய்வேலியில் பரபர!
கடலூர்: என்எல்சி நிர்வாகம் மற்றும் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், புவனகிரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் புவனகிரியில் உள்ள தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் 2-வது சுரங்க விரிவாக்க பணிகளுக்காக கரிவெட்டி, கத்தாழை, மும்முடி சோழகன், வளையமாதேவி உள்ளிட்ட பகுதியில் புதிய பரவனாறுக்கு மாற்றுப்பாதை அமைக்கும் பணியை கடந்த 26ஆம் தேதி என்.எல்.சி நிர்வாகம் தொடங்கியது. மேல் வளையமாதேவி பகுதியில் என்.எல்.சி நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில், நெற்பயிர்களை அழித்து கால்வாய் தோண்டும் பணிகளை என்எல்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

நிலங்களில் விவசாயிகள் பயிர் செய்திருந்த நிலையில் அவற்றை அழித்து கால்வாய் வெட்டும் பணி நடைபெறுவதற்கு விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். என்.எல்.சி நிர்வாகத்தைக் கண்டித்து பாமக சார்பில் நெய்வேலி என்.எல்.சி முன்பாக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை போலீசார் கைது செய்தனர்.
அப்போது வன்முறை ஏற்பட்டதைத் தொடர்ந்து, வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். வானை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவத்தால் என்எல்சி நிறுவனம் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாமக நடத்திய போராட்டம் கலவரமாக மாறிய நிலையில் 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் விவசாயிகளை வஞ்சித்து அடக்குமுறை மூலம் என்.எல்.சி நிறுவனத்துக்கு நிலம் எடுத்துக் கொடுக்கும் விவசாயிகளையும் விவசாயத்தையும் அழிக்கும் திமுக அரசை கண்டித்து வளையமாதேவியில் அறவழியில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி கடலூர் மாவட்ட காவல்துறையிடம் புவனகிரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித் தேவன் நேற்று மனு அளித்தார்.
ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி அவரது போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இதையடுத்து புவனகிரி சட்டமன்ற அலுவலகத்தில் இன்று காலை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார் அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன்.
என்.எல்.சி நிர்வாகத்தின் அராஜகப் போக்கைக் கண்டித்து அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. அவருடன் ஏராளமான அதிமுகவினர் மற்றும் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
இதற்கிடையே, விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் என்எல்சி நிர்வாகம், சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக கால்வாய் தோண்டும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கடலூர் மாவட்டம் முழுக்க பதற்றம் நிலவி வருவதால், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications