பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோயிலில் பூமியில் இருந்து வந்த அப்பர் பெருமானின் சிலை.. பக்தர்கள் பரவசம்
கடலூர்: பெண்ணாடம் கோவிலில் புனரமைப்பு பணிக்காக பள்ளம் தோண்டிய போது அப்பர் பெருமானின் சிலை கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பிரளயகாலேஸ்வரர் கோயிலில் தான் அப்பர் பெருமான் தன் திருமேனியில் சூல, இடப முத்திரைகளை வேண்டிப் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருவாரூரில், வேளாளர் மரபில் பிறந்தவர் மருள்நீக்கியார். பின்னாளில் திருநாவுக்கரசராக உயர்ந்தவர் இவரே அவரது சகோதரி திலகவதியார் சிவபக்தை. வடநாட்டிலுள்ள பாடலிபுத்திரம் சென்ற மருள்நீக்கியாரை, சமணர்கள் சமண மதத்தில் இணைத்தனர். தருமசேனர் என்ற பெயரையும் சூட்டினர். தன் தம்பி சமண மதத்தைச் சார்ந்துவிட்டதை அறிந்து, சிறந்த சிவபக்தையாக விளங்கிய திலகவதியார், தம் தம்பியாரை சைவ மதத்திற்கு மாற்றும்படி சிவபெருமானை வேண்டினார்.

சிவபெருமான் தருமசேனருக்கு வயிற்றில் சூலை நோயை கொடுத்தார். அந்நோயைத் தீர்க்க, சமணர்கள் அரும்பாடு பட்டும் குணமாகவில்லை. இதனால் சகோதரி இருந்த ஊருக்கு வந்தார் தருமசேனர். திலகவதியாரின் திருவதிகை மடத்தை வந்தடைந்தார். திலகவதியார் தம்பி தருமசேனருக்குத் தீட்சை அளித்தார். இருவரும் வீரட்டானேசுவரர் ஆலயம் சென்று வணங்கினார். அங்கு தருமசேனர், 'கூற்றாயினவாறு விலக்ககிலீர்' என்ற திருப்பதிகத்தைப் பாட, அவரது சூலை நோய் விலகியது. எம்பெயரில் தீம் பதிகம் பாடியதால் இனி, 'நாவுக்கரசு' என்று அழைக்கப் பெறுவாய் என்ற அசரீரியும் ஒலித்தது.
திருநாவுக்கரசர் பல சிவத்தலங்களுக்குச் சென்று வழிபட்டார். தனக்கு விருப்பமான ஒன்றை, தங்கள் உடலில் பச்சைக் குத்திக் கொள்ளும் வழக்கம் இன்றும் பரவலாகக் காணப்படுகிறது. இதற்கெல்லாம் முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் திருநாவுக்கரசர். திருப்பெண்ணாகடத்திலுள்ள திருத்தூங்கானை மாடம் சென்று அங்குள்ள இறைவரிடம், "அடியேன் உடல் சமணத் தொடர்புடையது. இவ்வுடலோடு நான் உயிர் வாழ மாட்டேன். என் உடலில் சூலம் மற்றும் இடப முத்திரை பொறித்து அருள வேண்டும்!" என்று வேண்டி பதிகம் ஒன்றைப் பாடினார். சிவனருளால் சிவகணம் ஒன்று தோன்றி, நாவரசரின் தோளில் சிவ முத்திரைகளைப் பொறித்தது என பெரியபுராணம் குறிப்பிட்டுள்ளது.
பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் திருக்கோவில். தேவகன்னியர், காமதேனு, ஐராவதம், இந்திரன் வழிபட்டுப் பேறு பெற்ற தலம், நான்கு திசைகளிலும் இறைவனைத் தரிசிக்கும் வசதி அமைந்த ஆலயம் எனப் பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் திருக்கோவில்.
ஒரு சமயம் பிரளயம் ஏற்பட்டது. வெள்ளம் பெருக்கெடுத்து உயிர்களையும் உடைமைகளையும் அழித்து வந்தது. ஆனால், வெள்ளாற்றிற்கும், தென்பெண்ணை ஆற்றிற்கும் இடைப்பட்ட நடுநாட்டில் மட்டும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இதற்கு, அங்குள்ள இறைவனே காரணம் என்பதை தேவர்களும், முனிவர்களும் உணர்ந்தனர். அத்தல இறைவனிடம் மக்களைக் காத்தருள வேண்டி நின்றனர். அதற்குச் செவிசாய்த்த இறைவன், பிரளயத்தை தடுக்குமாறு நந்திதேவருக்கு ஆணையிட்டார். நந்திதேவர் ஊழி வெள்ளத்தைத் தன் வாயால் உறிஞ்சி, உலகைக் காத்தருளினார். எனவே இத்தல இறைவன் 'பிரளயகாலேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.
இந்த ஆலயத்தை சுற்றிலும் புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக பள்ளம் தோண்டியபோது, அப்பர் பெருமான் சிலை கண்டெடுக்கப்பட்டது. இரண்டரை அடி உயரத்தில் கையெடுத்து கும்பிட்டது போல காணப்படும் அப்பர் பெருமானை பார்த்து பக்தர்கள் மெய்சிலிர்த்தனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications