'சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசின்.. கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்.." ஐடியா தரும் கே.பாலகிருஷ்ணன்
கடலூர்: கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்றவர்கள் பலியானது முதல் கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட மரணங்கள் வரை பல்வேறு விவகாரங்கள் குறித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் விரிவாகப் பேட்டி அளித்தார்.
Recommended Video
கடலூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் சார்பில் நிகழ்ச்சிகளில் நடத்தப்பட்டனர். அந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார்
அப்போது கே.பாலகிருஷ்ணன் நேற்று கடலூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் அங்கு பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாகப் பேட்டி அளித்தார்.

கெடிலம் ஆறு
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், "கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. அவர்களது வீட்டில் கழிவறை வசதி இல்லாததால் தான் இந்த விபத்து நடந்துள்ளது. அதனால் கழிவறை இல்லாத அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்டிக்கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இறந்தவர்களின் குடும்பத்துக்குத் தலா ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது போதுமானது அல்ல. அதனை உயர்த்தி வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலை வழங்க வேண்டும்.

நடராஜர் கோயில்
சிதம்பரம் நடராஜர் கோவிலின் வரவு -செலவு கணக்கைத் தீட்சிதர்கள் காண்பிக்க மறுப்பது ஏற்புடையது அல்ல. நடராஜர் கோவில் தீட்சிதர்களுக்குச் சொந்தமானது என்பது உண்மைக்குப் புறம்பானது. அது பொதுச்சொத்து தனிப்பட்ட உரிமை அல்ல. அதனால் நடராஜர் கோவிலில் கணக்குகளை அரசு உறுதியாக ஆய்வு செய்ய வேண்டும். மேலும் தனிச்சட்டம் இயற்றி அரசின் கட்டுப்பாட்டுக்குள் நடராஜர் கோவிலைக் கொண்டு வரவேண்டும்.

பட்டியலின பெண்
மேலும் ஏற்கனவே கோவிலுக்குள் பட்டியலின சமுதாய பெண் சென்ற போது தடுத்துத் தாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மீதும் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலை
மத்திய அரசை எட்டு ஆண்டுகள் நிறைவு செய்துள்ளோம் என்று பேசி வருகின்றனர். இந்த எட்டு ஆண்டுகளில் மோடி அரசு விலைவாசி உயர்வு பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த வில்லை.. லட்சக் கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். மேலும் வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையெல்லாம் விட்டுவிட்டு மதம் என்கிற கருவியை மட்டும் பயன்படுத்தி மதக்கலவரத்தை உருவாக்குவதற்குத் துடிக்கிறார்கள்.

அண்ணாமலை
தமிழகத்தில் அண்ணாமலை நினைத்ததை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். அரசின் மீது பல குற்றச்சாட்டுகளை வைக்கிறார். மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை 16 முறை உயர்த்தும் போது அண்ணாமலை ஒரு முறை கூட எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. முழு விலை உயர்வுக்குக் காரணமாக இருந்துவிட்டு இன்று விலையைக் குறைக்கவில்லை என்று கூறுவது சரியல்ல.

குழந்தை திருமணம்
மேலும் தமிழகத்தில் கொரோனா காலத்தில் 513 மாணவிகளுக்குக் குழந்தை திருமணம் நடந்துள்ளது. இந்த அதிர்ச்சிகரமான விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" எனக் கூறினார்.
-
5 தொகுதிகள் ஒதுக்கும் திமுக.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு என்ன? 6 மணி நேரமாக நடந்த ஆலோசனை -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
Election Exclusive: கூட்டணியில் ’சிவப்பு’ சிக்னல்.. தோழர்களை கூலாய் ஹேண்டில் செய்யும் ஸ்டாலின்! பரபரப்புக்களுக்கு எண்ட்! -
சிபிஎம் அவசர செயற்குழு.. திடீரென என்ட்ரி கொடுத்த வைகோ.. திமுக கூட்டணியில் பரபரப்பு -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள்











Click it and Unblock the Notifications