40 வயசில் தமிழரசி விபச்சாரம்.. கடலூரில் விழுந்தடித்து ஓடிவந்த சிறுமிகள்! இப்ப ஜெமீனாவுக்கு 20 வருஷம்
கடலூர்: கடந்த 2014ல் ஒரு தம்பதி, ஆண்டு குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட தம்பதி இருவரும், இப்போது சிக்கியிருக்கிறார்கள்.. இந்த வழக்கில் தொடர்புடைய ஏற்கனவே 16 பேருக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதித்து கடலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இப்போது முக்கிய குற்றவாளிகளான தம்பதி இருவருமே ஒரே நேரத்தில் சிக்கியிருப்பது பரபரப்பை தந்து வருகிறது. என்ன நடந்தது கடலூரில்?
கடந்த 2014ம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் இது. திட்டக்குடியை சேர்ந்த 13 மற்றும் 14 வயது பள்ளி மாணவிகள் 2 பேரும் திடீர்னு காணாமல் போய்விட்டனர். எனவே, மாயமான மாணவிகளின் பெற்றோர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், காவல்துறையில் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து, திட்டக்குடி போலீசார், உடனடியாக விசாரணை மேற்கொண்டனர். பின்னர் 1 வாரம் கழித்து, 2 மாணவிகளும் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.. ஆனால், 2 மாணவிகளுமே உடல்நலம் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தனர்.. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், என்ன நடந்தது என்று தங்கள் மகள்களிடம் விசாரித்தனர்.

புரோக்கர்கள்
பிறகுதான், சதீஷ்குமார்(39), அவரது மனைவி தமிழரசி(39) என்ற தம்பதியினர் பற்றிய விவரம் தெரியவந்தது. அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தை சேர்ந்தவர்கள் சதீஷ்குமார், தமிழரசி.. இவர்கள் 2 பேரும்தான் மாணவிகளை கடத்திச்சென்று, பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தினார்களாம்.
திட்டக்குடி, விருத்தாசலம், வடலூர், கோலியனூர், நெய்வேலி, சேலம் போன்ற பகுதிகளிலுள்ள புரோக்கர்கள் மூலம், பாலியல் தொழிலில் மாணவிகளை மிரட்டி ஈடுபடுத்தி சித்ரவதை செய்தார்களாம். இதையெல்லாம் 2 மாணவிகளும் அழுது கொண்டே பெற்றோரிடம் முறையிட்டார்கள்.. இதன்பிறகு, சதீஷ்குமார், தமிழரசி உள்பட 22 பேர் மீது திட்டக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தலைமறைவு
இந்த வழக்கானது, கடந்த 2016ல் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டது.. பிறகு சிபிசிஐடி போலீசார் கடலூர் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், கடந்த 2018ல், சதீஷ்குமார், தமிழரசி இருவருமே தலைமறைவாகிவிட்டார்கள்.. இதன்காரணமாக, தலைமறைவான ஜோடியை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.
இதற்குநடுவில், இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் கடந்த 4.1.2019ம் ஆண்டு, 16 பேருக்கு சிறை தண்டனை விதித்து கடலூர் மகிளா கோர்ட் தீர்ப்பளித்தது. சம்பந்தப்பட்ட ஜோடி, தலைமறைவாக இருந்தபோதிலும், இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே வழக்கில் தொடர்புடைய நம்மாழ்வார், செந்தில்குமார் ஆகியோர் உடல்நலம் குன்றி மரணமடைந்துவிட்டனர்..
சிபிசிஐடி போலீசார்
ஒருவர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். அதனால், தொடர்புடைய மற்ற 3 பேரை போலீசார் தேடி வந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டு ஜெபினா(40) என்பவரை சிபிசிஐடி போலீசார் கைதுசெய்தனர்.
கிட்டத்தட்ட இந்த வழக்கில் தொடர்புடைய அனைவருமே கைதான நிலையில், சதீஷ்குமார், தமிழரசி ஜோடி மட்டும் கிடைக்கவில்லை.. அதேசமயம், 7 வருடங்களாக அந்த ஜோடியை தேடும் பணியிலிருந்தும் போலீசார் சோர்ந்து போகவில்லை..
திருவண்ணாமலை
இப்படிப்பட்ட சூழலில்தான், சதீஷ்குமார் கோவையிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக சிபிசிஐடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக கருமத்தம்பட்டிக்கு சென்ற சிபிசிஐடி போலீசார், அங்கு சதீஷ்குமாரை சுற்றி வளைத்து கைது செய்தனர.
சதீஷ்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருவண்ணாமலையில் ஒரு வீட்டில் வேலை பார்த்து வருவது தெரிய வந்தது. இதனால் திருவண்ணாமலைக்கு சென்ற போலீசார், வீட்டு வேலை செய்து கொண்டிருந்த தமிழரசியையும் கைது செய்தனர். தற்போது இந்த ஜோடி கடலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
20 ஆண்டுகள்
இந்நிலையில், ஜெபினா மீதான விசாரணை கடலூர் போக்சோ கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி லட்சுமி ரமேஷ், ஜெபினாவிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 1 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த தீர்ப்பு கூறினார். ஜெபினா கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்..
இப்போது சதீஷ்குமார், தமிழரசி இவர்கள் இருவர் மீதான விசாரணை நடந்து வருகிறது. இந்த ஜோடிதான் முக்கிய குற்றவாளிகள் என்பதால், இவர்களுக்கான தண்டனை எப்படி இருக்க போகிறது என்று தெரியவில்லை. 13, 14 வயது சிறுமிகளை பாலியல் தொழிலில் தள்ளிய ஒவ்வொருவரும் கைதாகி வருவதும், அவர்களுக்கு நீதிமன்றம் தண்டனை அளித்து வருவதும் கடலூர் மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications