'ஏன் பொண்டாட்டிய கிண்டல் செஞ்ச?' கேள்வி கேட்ட கணவன், கழுத்தில் குத்திய சிறுவன், துடிதுடித்து ஷாக்
கடலூர்: எதற்காக என் மனைவியை கிண்டல் அடித்தாய்? அந்த பெண்ணின் கணவர், 17 வயது சிறுவனை தட்டிக்கேட்டிருக்கிறார்.. இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன், அந்த பெண்ணின் கணவரை கழுத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்தார். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மணலூர் காலனி பகுதியை சேர்ந்தவர் 33 வயதாகம் விஜய் என்ற விஜயகுமார்(வயது 33) செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சித்ரா(30) என்ற மனைவியும், 12 வயதில் ஒரு மகனும், 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை சித்ரா அதேபகுதியில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது அதேபகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் சித்ராவை கேலி-கிண்டல் செய்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் கோபம் அடைந்த சித்ரா, தனது கணவரிடம் சிறுவன் கிண்டல் செய்வது குறித்து கூறியுள்ளார். இதையடு்த்து விஜய், சிறுவனை சந்தித்து எதற்காக எனது மனைவியை கிண்டல் செய்தாய்? என தட்டிக்கேட்டதோடு, அவனை கத்தியால் கழுத்தில் கீறியதாக சொல்லப்படுகிறது.

இதனால் கடும் ஆத்திரமடைந்த 17 வயது சிறுவன், நேராக தனது வீட்டிற்கு ஓடினான். அங்கிருது கத்தியை எடுத்து வந்து, கண் இமைக்கும் நேரத்தில் வேகமாக விஜய்யின் கழுத்தில் குத்தினான் என கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் விஜய் கீழே சரிந்து மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், விஜய் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியிருக்கிறார்கள். இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜய்யை கத்தியால் குத்திக் கொலை செய்த 17 வயது சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications