பாம்பிடம் இருந்து 10 முறை எஜமானை காப்பாற்றிய நாய்.. நம்புனாதான் சோறு.. திகைக்க வைத்த கடலூர் ரவி
கடலூர்: கடலூர் மாவட்டம் பாடலி நகரில் டாபர்மேன் நாய் ஒன்று, அதன் எஜமானை பாம்பிடம் இருந்து காப்பாற்றி உள்ளது.இந்நிலையில் அந்த நாய் தொடர்ந்து தன்னை 10 வதுமுறையாக பாம்பிடம் இருந்து காப்பாற்றி உள்ளதாக உரிமையாளர் தெரிவித்திருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
கலகலப்பு படத்தில் சந்தானம், நடிகர் விமலிடம் எங்க பாட்டி புலியை மொரத்தால் அடிச்சு விரட்டுனாங்க என்று கூறுவார். அப்போது பெரிய கதையை கூறிவிட்டு நம்பினால் தான் சோறு என்பார்.. அப்படி ஒரு கதையைத்தான் கடலூர் மாவட்டம் பாடலி நகரைச் சேர்ந்த ரவி என்பவர் கூறி வியப்பை ஏற்படுத்தி உள்ளார்.

கடலூர் மாவட்டம் பாடலி நகரை சேர்ந்தவர் ரவி தன் வீட்டில் டாபர்மேன் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நாயை அவர் செல்லமாக பட்டி என்று பெயர் வைத்து அழைத்து வருகிறார். ஒரு குழந்தையை போல தனது நாயை பாசமாக வளர்த்து வரும் ரவி, தனது நாய் சமீபத்தில் எதையோ பார்த்து வழக்கத்தை விட வேகமாக குறைப்பதை கண்டார்,. இதனால் சந்தேகமடைந்த ரவி வீட்டின் வெளியே சென்று பார்த்துள்ளார்.
அப்போது வீட்டின் வெளியே செடிகள் வளர்க்கப்படும் வேலிக்குள் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ந்து போனார். உடனே இது குறித்து பாம்புபிடி வீரர் செல்வாவிற்கு தகவல் கொடுத்தார்.
அவர் வருவதற்கு 20 நிமிடங்கள் ஆன நிலையில், அதுவரை பாம்பை இடத்தை விட்டு நகர விடாமல், நாய் குரைத்துக்கொண்டே இருந்துள்ளது. பின்னர் பாம்புபிடி வீரர் செல்வா சம்பவ இடத்திற்கு வந்து லாவகமாக பாம்பை பிடித்து பாட்டிலில் அடைத்து கொண்டு சென்றார். பின்னர் பத்திரமாக அந்த பாம்பை காட்டில் விட்டுவிட்டார்.
இதனிடையே பாம்பு தன்னை காப்பாற்றியதை கண்டு நாயின் உரிமையாளர் ரவி அதை தட்டி கொடுத்து பாரட்டினார். மேலும் இதற்கு முன்பு 9 முறை வீட்டிற்குள் பாம்பு வந்தபோதிலும் தனது செல்ல நாய், இதேபோன்று குறைத்து காட்டிக்கொடுத்ததாக கூறி வியப்பை ஏற்படுத்தினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications