Cuddalore: கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. மாமனார்னு கூட பார்க்காம! பண்ருட்டி பெண் செய்த கொடூர செயல்
கடலூர்: கடலூர் பண்ருட்டியில் நடுரோட்டில் முந்திரி விவசாயி தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் பரபரப்பு தகவல்கள் வெளிவந்துள்ளன. விவசாயியின் மருமகள் மற்றும் அவரது கள்ளக்காதலன் தான் பிளான் செய்து இந்த சம்பவத்தை அரங்கேற்றி இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர் பண்ருட்டி மாளிகம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 70). முந்திரி விவசாயி. இவரது மகன் பூபதி. பூபதியின் மனைவி ஜெயப்பிரியா (28). இந்த தம்பதிக்கு 9 வயதில் மகனும், 7 வயதில் மகளும் உள்ளனர். பூபதி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டார்.

பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்
இதனால் பூபதியின் மனைவி ஜெயப்பிரியா மகன், மகளுடன் மாமனார் வீட்டிலேயே வசித்து வந்தார். அங்கிருந்தே கூலி வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் ராஜேந்திரன் அதே ஊரை சேர்ந்த கந்தனுடன் பைக்கில் மாளிகம்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு கார் குறுக்கே வந்து வழிமறித்தபடி நின்றது.
அந்த காரில் இருந்து இறங்கிய 3 பேர் தாங்கள் கேனில் வைத்திருந்த பெட்ரோலை ராஜேந்திரன் மீது ஊற்றினர். பின்னர் தீயை வைத்தனர். இதில் அவரது உடலில் தீப்பற்றி வலி தாங்க முடியாமல் கத்தி கூச்சலிட்டார். இதனால் பயந்துபோன கந்தன் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினார். தீ வைத்த கும்பலினரும் அங்கிருந்து காரில் தப்பி ஓடினர்.
தீயோடு அலறியபடி ஓடிய ராஜேந்திரன்
நடு ரோட்டில் உடலில் தீப்பற்றியபடி, "காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்... " என கத்தி அலறியபடி ராஜேந்திரன் சாலையில் ஓடிவந்தார். ஊர் பகுதிக்குள் தீயுடன் ஓடி வந்ததை பார்த்த மக்கள் உடனடியாக அவரது உடலில் பற்றிய தீயை அணைத்தனர். பின்னர் அங்கிருந்து அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முன்னதாக ராஜேந்திரன் உடலில் தீப்பற்றியபடி ஓடியது பதை பதைக்க வைத்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகின.. 70 சதவீத தீக்காயங்களுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காடாம்புலியூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
மருமகள் செய்த காரியம்
இதில் பண்ருட்டி காமராஜர் நகர் மெயின் ரோட்டை சேர்ந்த மணிகண்டன்(39), சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்த குபேந்திரன்(29), சித்திரைச்சாவடி பாடசாலை தெருவை சேர்ந்த பார்த்திபன்(28) ஆகியோர் தான் ராஜேந்திரன் உடலில் தீ வைத்து உயிரோடு எரித்து கொல்ல முயன்றது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
அதாவது ராஜேந்திரன் வீட்டில் வசித்து வந்த மருமகள் ஜெயப்பிரியாவின் கள்ளக்காதலன் தான் இந்த சம்பவத்தை அரங்கேற்றி இருப்பது தெரியவந்தது. கணவர் இறந்த பிறகு ஜெயப்பிரியாவும் கூலி வேலைக்கு சென்று வந்தார். அப்போது அங்கு மணிகண்டனுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. பின்னர் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர்.
மருமகள் உள்பட 4 பேர் கைது
இது ராஜேந்திரன் காதுக்கு வரவே அவர் மருமகளை கூப்பிட்டு சத்தம் போட்டுள்ளார். இதனால் மாமனார் மருமகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இது கள்ளக்காதலன் மணிகண்டனுக்கும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து தான் ஜெயப்பிரியாவும், மணிகண்டனும் சேர்ந்து ராஜேந்திரனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்த திட்டத்தின்படியே நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ராஜேந்திரன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தியது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டன் அவர்களது நண்பர்கள் பார்த்திபன், குபேந்திரன் மற்றும் ஜெயப்பிரியாவை போலீசார் கைது செய்தனர்.
-
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர்












Click it and Unblock the Notifications