கடலூர் பட்டாசு ஆலையில் நடந்த கோர வெடி விபத்து.. பலியான பெண்.. 2 பேரை கைது செய்த போலீசார்!
கடலூர் அருகே நிகழ்ந்த கோர விபத்தைத் தொடர்ந்து 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் : கடலூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலியான நிலையில், அந்த பட்டாசு ஆலையின் உரிமையாளரான கணவன், மனைவி இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், சிவனார்புரம் கிராமத்தில் இயங்கிவந்த தனியார் வெடிபொருள் தயாரிக்கும் பட்டாசு ஆலையில் நேற்று எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தைச் சேர்ந்த மல்லிகா என்பவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.

பட்டாசு ஆலை விபத்து
கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அருகே உள்ள சிவனார்புரம் பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில், தனியார் பட்டாசு தயாரிக்கும் நிறுவனத்தில் நேற்று மாலை அரியாங்குப்பம் ஓடைவெளி பகுதியை சேர்ந்த 10 பேர் பணியாற்றினர். அப்போது பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்துச் சிதறியது. இதில் மணவெளி பகுதியை சேர்ந்த மல்லிகா (60) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

படுகாயம்
தகவலறிந்து கடலூர் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்து 9 பேரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் 5 பேர் 80 சதவீத தீக்காயங்களுடன் உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த தீ விபத்து தொடர்பாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் நேரில் விசாரணை மேற்கொண்டனர். ரெட்டிசாவடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

நிவாரணம்
இதனிடையே கடலூர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சமும் காயமடைந்தோர் குடும்பத்திற்கு ரூ. 50,000 வழங்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும், இவ்விபத்தில் தீக்காயங்களுடன் கடலூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுமதி (45), பிருந்தாதேவி (35), லட்சுமி (24), செவ்வந்தி (19) மற்றும் அம்பிகா (18) ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

கைது
இந்நிலையில் கோர விபத்து நிகழ்ந்த பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்களான சேகர் (55), கோசலா (50) ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications