கடலூரில் யாரந்த பெண்? காமம் தலைக்கேறிய மைனர்.. இப்படி கூடவா? பண்ருட்டியின் பரிதாப பிஞ்சுகள்.. கொடுமை
கடலூர்: பண்ருட்டியில் அடுத்தடுத்த நடந்த சம்பவமானது, மக்களை கலங்கடித்து வருகிறது. இது தொடர்பான விசாரணையையும் போலீசார மேற்கொண்டு வருகிறார்கள்.
நண்பர்கள் என்றால் உயிரையும் கொடுப்பார்கள் என்பார்கள். ஆனால், நண்பரிடம் பழகி அவரது தங்கையையே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார் அந்த சிறுமி.. ஒருநாள் வீட்டில் அந்த பெண் தனியாக இருந்தபோது, அதே கிராமத்தை சேர்ந்த தொழிலாளி, பலாத்காரம் செய்துள்ளார்.
போக்சோ: இந்த விஷயம் தெரிந்து சிறுமியின் அம்மா, மகளிர் போலீசுக்கே சென்றுவிட்டார்.. இப்போது, அவர் தந்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. அந்த தொழிலாளியையும் போக்சோவில் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள்ளேயே இன்னொரு சம்பவம் இதே பண்ருட்டியில் நடந்திருக்கிறது. பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவன் அந்த சிறுவன்.. 16 வயதுதான் ஆகிறது.. இந்த சிறுவனின் நண்பர் விழுப்புரத்தில் இருப்பதால், அடிக்கடி நண்பர் வீட்டுக்கு சிறுவன் சென்று வருவது வழக்கமாகும்.
15 வயது தங்கை: அப்போதுதான், அந்த நண்பனின் 15 வயது தங்கையிடம், சிறுவனுக்கு பழக்கம் ஏற்பட்டது... ஆரம்பத்தில் அந்த பெண்ணிடம் சாதாரணமாக பேசி கொண்டிருந்த சிறுவன், திடீரென நெருக்கமாக பேச ஆரம்பித்தான்..
தினம் தினம் ஆசைவார்த்தைகளை சொல்லி வந்தநிலையில், ஒருகட்டத்தில் தன்னுடைய சொந்த ஊருக்கே அழைத்து வந்துவிட்டான்.. இப்போது சிறுவனுக்கு இன்னும் வசதியாகிவிட்டது.. இதையடுத்து, சிறுமியை பலாத்காரம் செய்யவும், சிறுமி கர்ப்பமானார். ஆனால், இது தெரியாத அந்த சிறுமியோ, தன்னுடைய சொந்த ஊருக்கே வந்துவிட்டார்.
மருத்துவமனை: இதனிடையே தங்களது மகளின் உடலில் மாற்றம் ஏற்பட்டு வருவதை பார்த்து பெற்றோர் குழம்பி போனார்கள்.. இதனால், சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள்.. சிறுமியை டாக்டர் செக்கப் செய்து, 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக சொன்னார்.. இதைக் கேட்டதும், பெற்றோர் அதிர்ச்சி அடைந்தது, சிறுமியிடம் இதுகுறித்து விசாரித்திருக்கிறார்கள்.
அப்போதுதான், அண்ணனின் நண்பனை பற்றி சொல்லவும், ஆத்திரமடைந்த பெற்றோர், உடனடியாக பண்ருட்டி யூனியன் சமூக நல விரிவாக்க அலுவலருக்கு தெரியப்படுத்தினார்கள்.. உடனே அவர், பண்ருட்டி மகளிர் போலீசில் புகார் தந்தார்.. இப்போது, சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
பெரும் கவலை: நாளுக்கு நாள் கடலூர் மாவட்டத்தில், பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதும், அதிலும் சின்னஞ்சிறுவர்களே இப்படி போக்சோவில் கைதாகி வருவதும், பொதுமக்களை கவலை கொள்ள செய்திருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications