கடலூர் அருகே கடப்பாறையுடன் போன அரசு ஊழியர்கள்.. சொந்த நிலம், வீடு வைத்திருப்பவர்கள் ஆடிப்போயிட்டாங்க
கடலூர்: கடலூர் அரசு ஊழியர்களின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.. பொதுவாக, மாநகராட்சிக்கு வரி செலுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட வீட்டின் குடிநீர் இணைப்பை துண்டிப்பது வழக்கமாகும். ஆனால், கடலூரில் வேறு மாதிரியான சம்பவங்கள் நடப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்கள் அம்மாவட்ட மக்களை கலக்கத்திற்கும் உள்ளாக்கி வருகிறது. என்ன நடந்தது?
சொந்தமாக வீடு வைத்திருப்பவர்கள், நிலம் வைத்திருப்பவர்கள் ஆகியோரிடம் மாநகராட்சி சார்பில் சொத்து வரி வசூலிக்கப்படுவது வழக்கமாகும்.. இதுதான், மாநகராட்சிகளுக்கு முக்கிய வருவாய் இனமாக விளங்கி வருகிறது.

இந்த வருவாயை கொண்டு, மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள், சுகாதார பணிகள், திடக்கழிவுகளை அகற்றுதல், தெரு விளக்குகள் அமைத்தல், பூங்காக்கள் மற்றும் சாலை பராமரித்தல், பொது சுகாதாரம் நோய் தடுப்பு பணி போன்ற அத்தியாவசிய பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.
சலுகைகள் - ஊக்கத்தொகை- பரிசு
அதனால்தான், உரிய காலக்கட்டத்தில் வரியை செலுத்துவோர்களை ஊக்குவிப்பதற்காக சலுகைகள் வழங்கப்படுகின்றன.. குறிப்பிட்ட தேதிக்குள் முழுமையாக செலுத்துவோருக்கு முதன் முறையாக 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.. காலக்கெடு முடிந்தும் வரிகட்டாமல் இருந்தால் அபராதமும் விதிக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் வரியை செலுத்த, அந்தந்த மாநகராட்சிகள், பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கடலூரில் நடந்துள்ள சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை தந்து வருகிறது.. கடலூர் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதன் நிதி நெருக்கடியை தீர்க்கும் விதமாக, வரியை வசூல் செய்து வருகிறார்கள்.. அந்தவகையில் கடலூரில் பல கோடி ரூபாய் வரிபாக்கி இருப்பதாக தெரிகிறது. எனவே, வசூல் செய்வதில் ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இன்னும் டைம் இருக்கே
ஆனால் வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்பை கடப்பாரையுடன் சென்று மாநகராட்சி ஊழியர்கள் துண்டிப்பதும் நடைபெற்று வருகிறது. வரி செலுத்த மார்ச் 31ம் தேதி வரை டைம் இருக்கும்போது, அந்த அவகாசத்தை மாநகராட்சி ஊழியர்கள் தர மறுக்கிறார்களாம்.. 31ம் தேதிக்கு முன்கூட்டியே வரியை செலுத்தும்படி வற்புறுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறைந்த வரி பாக்கி இருப்பவர்கள் வீட்டுக்கு மட்டுமே கடப்பாரையுடன் சென்று ஊழியர்கள் மிரட்டல் விடுக்கிறார்கள்.. ஆனால் பல லட்ச ரூபாய் வரிபாக்கி வைத்துள்ளவர்களின் வீடுகளுக்கு எந்த ஊழியர்களும் செல்வதில்லை என்று பொதுமக்களே குமுறி கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கிறார்கள்.
அந்தவகையில், ஒவ்வொரு வீடுகளுக்கும் கடப்பாரையுடன் கடலூரில் மாநகராட்சி ஊழியர்கள் செல்வதையும், வரி கேட்டு வீட்டு உரிமையாளர்களிடம் வாக்குவாதம் செய்வதையும், பொதுமக்களே வீடியோ எடுத்து, இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர்..
வீடியோவை கண்டு ஆடிப்போன கடலூர்
இப்படித்தான் ஒரு வீடியோவில், "நாங்கள் இதுவரை வரி பாக்கியை வைத்ததில்லை.. இந்த தவணை மட்டுமே கட்ட வேண்டும் .. அதற்கும் மார்ச் 31 வரை கால அவகாசம் உள்ளது. என் வீட்டுக்காரர் வெளியே சென்றிருக்கிறார்.. அவர் வந்ததுமே நான் கட்டுகிறேன்" என்று அந்த பெண்மணி சொல்கிறார்..
அதற்கு மாநகராட்சி ஊழியர்கள், உடனே வரி கட்டுங்க, இல்லாவிட்டால் நடவடிக்கை எடுப்போம் என்று மிரட்டுகிறார்கள். இந்த வீடியோக்களை பார்த்து கடலூரே கதிகலங்கி போயிருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications