கடலூர் கிட்ட நேத்து வெச்ச மீன் குழம்பு.. பக்கத்து வீட்டில் படுத்துக்கொண்ட மனைவி.. அசிங்கப்பட்ட பெண்
கடலூர்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து மீன் குழம்பில் விஷம் கலந்து கணவரை கொலை செய்த பெண்ணிடம் தொடர் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. கடலூரில் நடந்த பகீர் சம்பவம் குறித்த கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகி, கூடுதல் பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது.
கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அடுத்த கட்டியங்குப்பம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த கோபாலகண்ணனுக்கு 50 வயதாகிறது.. இவரது மனைவி விஜயாவுக்கு 48 வயதாகிறது.. திருமணம் நடந்து 27 வருடங்களான நிலையில், இவர்களுக்கு குழந்தை இல்லை..

கோபாலகண்ணன் கோவையில், ஒரு கல்லூரிலேயே தங்கி சமையல் வேலை பார்ப்பவர்.. 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே சொந்த ஊருக்கு வந்து செல்வார். இதனிடையே, மனைவி விஜயாவுக்கு, எதிர்வீட்டில் வசித்து வந்த 57 வயது தேவநாதன் என்பவருடன் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. தேவநாதனுக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் இருக்கிறார்கள்.
இந்த கள்ளக்காதல் விவகாரம், கோபாலகண்ணனுக்கு தெரியவரவும், மீண்டும் கோவைக்கு வேலைக்கு செல்லாமல் கடந்த சில மாதங்களாக வீட்டிலேயே இருந்துள்ளார்.. கள்ளக்காதலுக்கு தொந்தரவாக கணவன் இருந்ததால், விஜயாவும், எதிர்வீட்டு தேவநாதனும் சேர்ந்து, கோபால கண்ணனை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.
கள்ளக்காதல் ஜோடி கைது
சம்பவத்தன்று மீன்குழம்பில் விஷம் கலந்து தந்துவிடவும், அதை சாப்பிட்ட கோபாலகண்ணன், வாயில் நுரைதள்ளி இறந்துவிட்டார். இந்த கொலை தொடர்பாக, கள்ளக்காதல் ஜோடி கைதாகி உள்ளது.. அவர்களிடம் விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது..
அதாவது, தீபாவளி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த கோபால கண்ணனிடம், அவரது அப்பா ராதாகிருஷ்ணன், மருமகளின் கள்ளக்காதல் விஷயத்தை சொன்னாராம்.. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கோபாலகண்ணனுக்கு, மீண்டும் கோவைக்கு போகவே மனசில்லையாம்.. இந்த ஆத்திரத்தில்தான், அவரை கொல்ல முடிவு செய்துள்ளார் விஜயா.
வாயில் நுரை தள்ளி
மீன்குழம்பை சாப்பிட்டு, கோபாலகண்ணன் சுருண்டு விழுந்ததுமே, குள்ளஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிவந்துள்ளார் விஜயா.. தன்னுடைய கணவர் வாயில் நுரை தள்ளியபடி வீட்டில் விழுந்து கிடந்ததாகவும், மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்து விட்டதாகவும் வந்து புகார் தெரிவித்தார்.. இந்த புகாரை அடுத்து குள்ளஞ்சாவடி போலீஸார் நேரில் வந்து விஜயாவிடம் விசாரணை நடத்தினார்கள்..
ஆனால், அதற்குள் கடலூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், கோபாலகண்ணன் விஷம் சாப்பிட்டதால்தான் மரணம் ஏற்பட்டதாக அறிவித்தனர்.. உடனே கோபாலகண்ணனின் அப்பா ராதாகிருஷ்ணனும், போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.
அப்பாவின் பரபரப்பு புகார்
அதில், "என்னுடைய கோபாலகண்ணன் கடந்த 5 ஆண்டுகளாக கோவையில் சமையல் வேலை செய்து வந்தார். எனது மருமகள் விஜயாவுக்கும், எங்கள் ஊரைச் சேர்ந்த தேவநாதன்(57) என்பருக்கும் இடையே தகாத உறவு உள்ளது. இதுபற்றி அறிந்த நான், எனது மகனிடம் தெரிவித்தேன். இதையடுத்து, கோபாலகண்ணன் அங்கிருந்து சொந்த ஊருக்கு வந்தார். கடந்த 3 மாதங்களாக வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில் எனது மகனை கொலை செய்ய திட்டம் போட்டு, வீட்டில் சமைத்து வைத்திருந்த மீன் குழம்பில் விஜயா விஷத்தை கலந்து கொடுத்தார். விஷம் கலந்தது பற்றி எதுவும் தெரியாததால், கோபாலகண்ணன் சாப்பாட்டில் மீன் குழம்பை ஊற்றி சாப்பிட்டார். அதிகாலை 5 மணிக்கு அவர் வாயில் நுரை வந்த நிலையில் கிடந்ததை பார்த்து, மருத்துவமனையில் சேர்த்த போது அவர் இறந்து விட்டதாக கூறினர். எனது மகனை திட்டம் தீட்டி கொலை செய்த விஜயா, அவரது கள்ளக்காதலன் தேவநாதன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
எந்நேரமும் டார்ச்சர்
டாக்டர்களின் ரிப்போர்ட், ராதாகிருஷ்ணனின் புகார் என இவைகளை வைத்து போலீசார், தங்கள் விசாரணையை விஜயா மீது திருப்பினார்கள்.. விஜயாவையும், கள்ளக்காதலன் தேவநாதனையும் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது பல்வேறு விஷயங்களை போலீசாரிடம் சொன்னாராம் விஜயா. அதாவது, கடந்த மூன்று மாதங்களாக, கோபால கண்ணன் வேலைக்கு போகாமல், கள்ளக்காதல் விவகாரம் தெரிந்து தினமும் விஜயாவை அடித்து துன்புறுத்தினாராம்.. மது அருந்திவிட்டு விஜயாவை தாக்கினாராம். வேலைக்கு போகாமல், எந்நேரமும் வீட்டிற்குள்ளேயே உட்கார்ந்து டார்ச்சல் செய்ததால்தான், கணவரை கொல்ல திட்டம் தீட்டினாராம் விஜயா.
மீன்குழம்பு என்றால் பிடிக்கும்
மீன் குழம்பு என்றால் கோபாலக்கண்ணனுக்கு மிகவும் பிடிக்குமாம். எனவே, இதற்காகவே முன்தினம் இரவு மீன்குழம்பு வைத்திருக்கிறார்கள். அப்போது தேவநாதன், வயலுக்கு அடிக்கப்படும் பூச்சிகொல்லி விஷம் வாங்கி தந்து தந்தாராம். இரவு கணவனுக்கு சாப்பாடு போட்டு, மீன்குழம்பையும ஊற்றி தந்துவிட்டு, கோபால கண்ணன் தன்னை தாக்குவதாக கூறி பக்கத்து வீட்டில் சென்று விஜயா படுத்துக்கொண்டாராம்.
பிறகு காலையில் வீட்டிற்குள் தன்னுடைய வீட்டிற்குள் சென்றபோது, கோபால கண்ணன் வாயில் நுரை தள்ளி கிடப்பதாக அக்கம் பக்கத்தில் கூப்பிட்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்தாராம் விஜயா.. இவ்வளவையும் விஜயா வாக்குமூலமாக தந்ததையடுத்து, கள்ளக்காதல் ஜோடியை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications