போனா வராது.. பொழுதானா கிடைக்காது.. ரூ.20க்கு ஒரு கிலோ தக்காளி.. முட்டிமோதிய மக்கள்! எங்கே தெரியுமா?
கடலூர்: தக்காளி விலை ரூ.100ஐக் கடந்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கடலூரில் ஒரு கடையில் தக்காளி கிலோ ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு தக்காளி வாங்கிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்ககளில் தொடர் மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கபப்ட்டுள்ளதால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் 130 ரூபாய் வரை தக்காளி விலை விற்பனை செய்யப்பட்டு வந்ததால் அரசு தானாக முன்வந்து ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என அறிவித்தது.

தக்காளி ரேட்: அதன்படி, ரேஷன் கடைகளில் ஒரு குடும்பத்துக்கு 1 கிலோ தக்காளி என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடைகளில் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதில் மொத்த வியாபாரம் மற்றும் சில்லறை வியாபார கடைகளில் மாறுபட்ட விலையில் தக்காளி விலை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டதால் மக்கள் மார்க்கெட்டில் தக்காளி வாங்குவது குறைந்தது. தக்காளிக்கான தேவை மார்க்கெட்டில் குறைந்த நிலையில் தானாக ஒரே நாளில் அதிரடியாக தக்காளி விலை குறைந்துள்ளது. அதன்படி கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரே நாளில் தக்காளி கிலோவுக்கு ரூ.40 குறைந்தது. தக்காளி கிலோ ரூபாய் 80 - 90க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடலூரில் பரபரப்பு: இந்த நிலையில் இன்று காலை கடலூர் செல்லங்குப்பம் பகுதியில் ராஜேஷ் என்கின்ற வியாபாரி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுப்பது போல் ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய் என அறிவித்து தக்காளி விற்பனையை தொடங்கினார். இதனைப் பார்த்த பொதுமக்கள் திரண்டு வந்து கடையில் கிலோ 20 ரூபாய்க்கு தக்காளியை வாங்கி சென்றனர்.
இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவியதால் பொதுமக்கள், இல்லத்தரசிகள் ஏராளமானோர் கடை முன்பு திரண்டு தக்காளிச் வாங்கி சென்றனர். ஒரு நபருக்கு ஒரு கிலோ என்ற அடிப்படையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்தது. சிறிது நேரத்திலேயே வியாபாரி ராஜேஷ் கொண்டு வந்த அனைத்து தக்காளிகளும் விற்றுத் தீர்ந்தன.
தக்காளி கிலோ ரூ. 20: இது குறித்து அந்த காய்கறி கடை உரிமையாளர் ராஜேஷ் கூறுகையில், "கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் இருந்து சுமார் 1.5 டன் தக்காளி எங்கள் கடைக்கு வந்தது. தற்போது தமிழ்நாட்டில் ரூ. 100 முதல் ரூ. 150 வரை ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
50 கிராம், 100 கிராம் என்ற அளவிற்கு மட்டுமே தக்காளி வாங்கி பயன்படுத்தக்கூடிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு கிலோ தக்காளி ரூ.20க்கு விற்பனை செய்தால் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் கிடைக்கும் என்ற நோக்கில் விற்பனை செய்து வருகிறோம்.

600 கிலோ தக்காளி: கர்நாடகா மாநிலம் கோலாரில் இருந்து ஒரு கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி வாங்கிக்கொண்டு இங்கு 20 ரூபாய்க்கு சேவை நோக்கத்துடன் மக்களுக்கு விற்பனை செய்து உள்ளேன். இன்று காலை 600 கிலோ தக்காளி வரவழைத்த நிலையில் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கியதால் தீர்ந்துவிட்டன.
கொரோனா காலத்தில் 5 கிலோ காய்கறிகள் ரூ.100க்கு விற்பனை செய்தேன். வெங்காயம் கிலோ ரூ 100க்கு விற்பனை செய்யப்பட்ட போது நான் வெறும் 10 ரூபாய்க்கு விற்பனை செய்தேன். தக்காளியை குறைந்த விலையில் விற்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஒரு நபருக்கு 1 கிலோ வீதம் தக்காளி விற்பனை செய்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications