சுரங்க விரிவாக்கம்.. நிலம் கையகப்படுத்த என்.எல்.சி மீண்டும் நோட்டீஸ்.. விவசாயிகள் அதிர்ச்சி!
கடலூர்: சுரங்க விரிவாக்க பணிகளுக்காக மீண்டும் நிலம் கையகப்படுத்துவதற்கான நோட்டீசை என்.எல்.சி நிறுவனம் வழங்கியுள்ளது. 30 நாட்களுக்குள் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்க வேண்டும் என்றும் என்.எல்.சி கூறியுள்ளது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி நிறுவனம், சுரங்கங்களில் இருந்து நிலக்கரியை வெட்டி எடுத்து அதன் மூலமாக மின்சார உற்பத்தி செய்து விநியோகம் செய்து வருகிறது. இந்த நிலையில், தற்போது அங்குள்ள சுரங்கங்களில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சுரங்க விரிவாக்க பணிகளில் என்.எல்.சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.

சுரங்க விரிவாக்கம் பரவனாறு கால்வாய் பணிக்காக ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் கால்வாய் வெட்டும் பணியை நெற்பயிற்களை அழித்து என்.எல்.சி நிர்வாகம் மேற்கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. என்.எல்.சியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக போரட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தில் வன்முறையும் ஏற்பட்டது. இதனால், கடலூர் மாவட்டம் என்.எல்.சி நிறுவனம் அமைந்துள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தற்போது பரவனாறு கால்வாய் வெட்டும் பணியால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் என்.எல்.சி மாவட்ட நிர்வாகம் மூலமாக வழங்கி வருகிறது. பரவனாறு கால்வாய் அமைக்கும் பணிகள் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வரும் நிலையில், சுரங்க விரிவாக்க பணிகளுக்காக என்.எல்.சி மீண்டும் நோட்டீஸ் வழங்கியுள்ளது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுரங்கங்கள் 1 மற்றும் 1 ஏ விரிவாக்க பணிகளுக்காக நிலம் தேவைப்படுவதாக பத்திரிகைகளில் என்.எல்.சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. நெய்வேலி அருகே உள்ள தென்குத்து, அம்மேரி, தொப்பிலிகுப்பம் உள்பட பல்வேறு கிராமங்களில் நிலம் தேவைப்படுவதாகவும் நிலத்தின் அளவு, அந்த இடத்தில் என்ன பயிர் செய்யப்பட்டுள்ளது, நிலத்தின் உரிமையாளார் பெயர் ஆகியவை நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நில உரிமையாளர்கள் மற்றும் அதனை அனுபவித்து வருபவர்கள் 30 நாட்களுக்குள் ஏதேனும் ஆட்சேபம் இருந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும். 30 தினங்களுக்குள் நில எடுப்பு அதிகாரிகளிடம் ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்க வேண்டும். அதற்கு பிறகு வந்தால் எந்த ஒரு ஆட்சேபனையும் ஏற்றுக்கொள்ளப்படாது.
செப்டம்பர் மாதத்தில் இதற்கான நேரடி விசாரணையானது நடைபெறும். ஆட்சேபம் தெரிவிப்பவர்களிடம் அப்போது விவரம் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் என்.எல்.சி நிறுவனம் சுரங்க விரிவாக்கத்தில் தீவிரம் காட்டி வருவது தெரியவருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications