கடலூர் ரஞ்சிதாவை நியாபகம் இருக்கா.. 4 வயது குழந்தை என்று கூட பார்க்காத கல் நெஞ்சு.. பெரிய தண்டனை
கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கீழக்கொல்லை கிராமத்தை சேர்ந்த செந்தில்நாதன் கார் டிரைவர் ஆவார். இவரது மனைவி லட்சுமி.. இவர்களது இரண்டாவது மகன் அஸ்வந்துக்கு 4 வயது ஆகிறது... இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த முருகவேல் மகள் ரஞ்சிதா என்பவருக்கும் செந்தில்நாதனுக்கும் இடப்பிரச்சனை இருந்துள்ளது. இந்த விவகாரத்தில் பழிவாங்க 4 வயது சிறுவனை கழுத்தை நெரித்துக் கொலை செய்த ரஞ்சிதாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கீழக்கொல்லை கிராமத்தை சேர்ந்த 42 வயதாகும் செந்தில்நாதன் அந்த பகுதியில் கார் டிரைவர் ஆவார். இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதியின் மகன்கள் அபி (11), அஸ்வந்த்(4) ஆவர். செந்தில்நாதன் குடும்பத்திற்கும், அதே பகுதியை சேர்ந்த முருகவேல் மகள் ரஞ்சிதா (29) குடும்பத்திற்கும் இடப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 26.1.2022 அன்று அஸ்வந்த் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த ரஞ்சிதா, சிறுவன் அஸ்வந்தை அருகில் உள்ள முந்திரி தோப்புக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அவர், இடப்பிரச்சினை தொடர்பாக செந்தில்நாதன் குடும்பத்தை பழிவாங்குவதற்காக சிறுவன் அஸ்வந்தை அடித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்திருக்கிறார்.
இதுகுறித்து செந்தில்நாதன், கடலூர் மாவட்டம் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சிதாவை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக கடலூர் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கில் அனைத்து சாட்சிகளின் விசாரணையும் முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
அதன்படி நீதிபதி (பொறுப்பு) ஷோபனா தேவி தனது தீர்ப்பில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ரஞ்சிதாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications