ரயில்வே கேட்டை திறக்க சொன்ன பள்ளி வேன் ஓட்டுநர்.. விபத்துக்கு காரணம் என்ன? ரயில்வே விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து தொடர்பாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. அதில் கேட் கீப்பர் கேட்டை மூடத் தொடங்கிய போது கேட்டை திறக்க பள்ளியின் வேன் ஓட்டுநர் கூறியதாகவும், தான் கடந்து செல்லும் வகையில் கேட்டை மூட வேண்டாம் என்று கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ஆச்சாரியா என்ற தனியார் பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றிக் கொண்டு இன்று காலை சென்று கொண்டிருந்தது. அந்த வழியில் ரயில்வே கேட் ஒன்று இருந்திருக்கிறது. அதனை கடக்க பள்ளி வேன் முயற்சித்த போது, அந்த வழியில் சிதம்பரம் நோக்கி ரயில் சென்றுள்ளது. அந்த ரயில், பள்ளி வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.

Cuddalore School Van Accident Southern Railway Blames Driver for Ignoring Gatekeeper s Warning

இதில் தனியார் பள்ளி வேன் சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டு, சுக்குநூறாக உடைந்தது. இந்த விபத்தில் பள்ளி வேனில் இருந்த 2 மாணவர்கள் உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது. விபத்து நடந்த சத்தம் கேட்டு அந்த பகுதிக்கு வந்த மக்கள், மாணவர் மற்றும் மாணவி ஆகியோரின் உடல்கள் சிதறி தண்டவாளத்தில் கிடந்ததை பார்த்து பதைபதைத்துள்ளனர்.

இதில் காயம் அடைந்த வேன் ஓட்டுநர் உட்பட 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கு ரயில்வே கேட் கீப்பரின் அலட்சியமே காரணமாக அப்பகுதி மக்கள் கூறி இருக்கின்றனர். ரயில்வே கேட்டை வழக்கமாக 30 நிமிடங்களுக்கு முன்பாகவே மூடிவிடுவார்கள். ஆனால் இன்று ரயில்வே கேட்டை மூடாமல், கேட் கீப்பர் தூங்கியதே விபத்துக்கு காரணம் என்று குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில் ரயில்வே கேட் கீப்பர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதேபோல் விபத்து குறித்து ரயில்வே தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், ரயில்வே கேட்டை திறக்க வேண்டும் என்று பள்ளி வேன் ஓட்டுநர் கேட் கீப்பரிடம் வலியுறுத்தியுள்ளார். கேட் கீப்பர் கேட்டை மூடத் தொடங்கிய போது, கேட்டை திறக்க வேன் ஓட்டுநர் கூறியுள்ளார்.

தாம் கடந்து செல்லும் வரை மூட வேண்டாம் என்று ரயில்வே கேட் கீப்பரிடம் பள்ளி வேன் ஓட்டுநர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி வேன் ஓட்டுநர் அப்படி கூறி இருந்தாலும், ரயில் எங்கு வருகிறது என்ற தகவல் கேட் கீப்பருக்கு நன்றாக தெரிந்திருக்கும். அதேபோல் பள்ளி வேன் ஓட்டுநரின் பேச்சை கேட்டு கேட் கீப்பர் ஏன் திறந்தார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+