கடலூரில் சினேகாவுக்கு இனிய திருமணம்.. தூங்கிய கணவனை எழுப்பப்போய்.. 10 மாசத்தில் இப்படியொரு முடிவு?
கடலூர்: புரிதல் இல்லாத ஒரே காரணத்துக்காக, அநியாயமாக பல உயிர்கள் காவு வாங்கப்பட்டு வருகின்றன.. முக்கியமாக இளம் தம்பதிகளிடம் இப்படியான புரிதல் இல்லாததால் , மணமுறிவுகளும், குடும்ப வன்முறைகளும், விவாகரத்துகளும் அதிகரித்து வருவது கவலையை தந்து கொண்டிருக்கிறது.. இப்படிப்பட்ட சூழலில், கடலூர் மாவட்டத்தில் துயரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.. இந்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து காட்டுமன்னார்கோவில் பகுதி மகக்ள இன்னும் மீளவில்லை.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது மேல பழஞ்சநல்லூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் விக்னேஷ்.. இவருக்கு 25 வயதாகிறது. இவரது மனைவி பெயர் சினேகா.. 24 வயதாகிறது..

10 மாத திருமண பந்தம்
இவர்களுக்கு 10 மாதங்களுக்கு முன்பு 2 வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. விக்னேஷ் அதே பகுதியில் ஆயில் மில் ஒன்றை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 25ம் தேதி அதாவது வெள்ளிக்கிழமை தன்னுடைய வீட்டில் தூங்கி கொண்டிருந்தார் விக்னேஷ்.. அப்போது சினேகா தூங்கி கொண்டிருந்த விக்னேஷை எழுப்பியதாக தெரிகிறது..
தூக்கத்தில் எழுப்பியதால், விக்னேஷூக்கு ஆத்திரம் வந்து, வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து வந்து சினேகாவின் உடலில் ஊற்றி நெருப்பு வைத்து கொளுத்திவிட்டார்.. இதனால் தீ உடல் முழுவதும் பரவி, வலியால் சினேகா சத்தம் போட்டு அலறியுள்ளார்.
உடம்பெல்லாம் காயம்
அவரது அலறலை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து சினேகாவை மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சினேகா மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு இப்போது சினேகாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காட்டுமன்னார்கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் கணவர் விக்னேஷூக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.. எனவே, கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெயிண்ட் தின்னர்
ஆனால், தூக்கத்தில் எழுப்பியது மட்டுமே விக்னேஷின் ஆத்திரத்துக்கு காரணமில்லை என்கிறார்கள்.. திருமணமாகி 10 மாதங்கள் ஆனாலும், ஆரம்பத்திலிருந்தே தம்பதிக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளன.. இதனால், தம்பதி இடையே அடிக்கடி குடும்ப தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது .. ஏற்கனவே சினேகா மீது கடுப்பில் இருந்த நிலையில், தூக்கத்திலிருந்து எழுப்பியபோது மொத்தமாக கொட்டிவிட்டதாக தெரிகிறது.
விக்னேஷ் ஆயில் மில் வைத்து நடத்தி வருவதால், பெயின்ட் அடிக்க பயன்படுத்தப்படும் தின்னர் திரவத்தை வீட்டில் வைத்திருந்துள்ளார்.. இதைதான் சினேகா மீது ஊற்றி தீ வைத்தார்.. திடீரென உடம்பெல்லாம் நெருப்பு பரவிவிடவும், அதிர்ச்சியடைந்த சினேகா, ஓடிவந்து கணவரை பதற்றத்தில் கட்டிப்பிடித்துவிட்டார். இதனால்தான் பயந்துபோன விக்னேஷ் அங்கிருந்து தப்பி காயத்துடன் வெளியே அலறி கொண்டே ஓடியிருக்கிறார்.
அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி
அதற்குபிறகே அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று இருவரையும் மீட்டுள்ளனர்.. எனினும் இதில், விக்னேஷூக்கும் லேசான தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து காட்டுமன்னார்கோவில் போலீசில் சினேகாவின் தாய்மாமன் ராஜீவ் காந்தி புகார் செய்தார்.
போலீஸார் வழக்கு பதிவு செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூக்கத்தில் இருந்து எழுப்பியதற்காக மனைவியை கணவன் தீ வைத்து கொளுத்திய சம்பவம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications