கடலூரில் வேப்பமரத்தில் இரவு 11.50 மணிக்கு சுஷ்மிதா.. காதல், கல்யாணம்.. காற்றில் கலந்த 19 வயது நர்ஸ்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூரில் ஒரு இளம் பெண்ணின் கனவுகளும், ஒரு பெற்றோரின் நம்பிக்கையும் இப்படித் திடீரென முடிந்து போனது, அந்த பகுதி முழுவதும் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.. இச்சம்பவம் குறித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தாலும், நர்சிங் மாணவியின் குறுகிய வாழ்வு பெரும் சோகத்தை தந்துள்ளது.. என்ன நடந்தது?

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ளது மேலவன்னியூர் பெரிய வட்டம்... இங்கு வசித்து வருகிறார் பாக்கியராஜ் (வயது 52)... இவர் விவசாய கூலித் தொழிலாளி ஆவார்..

தன்னுடைய மகள் சுஷ்மிதாவை நன்றாக படிக்க வைத்த நினைத்தார்.. சுஷ்மிதாவுக்கு 19 வயதாகிறது.. திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்சி., நர்சிங் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி ஆவார்..

கடலூர் சுஷ்மிதா நர்ஸ்

தன்னுடைய அப்பாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் சுஷ்மிதாவுக்கும் இருந்தது.. இளம் வயதிலேயே நர்ஸ் பணியில் சேர்ந்து, தன்னுடைய ஏழ்மையான குடும்பத்தை உயர்த்த வேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்து வந்துள்ளார் சுஷ்மிதா..

ஆனால் எதிர்பாராதவிதமாக காதலில் விழுந்தார். புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த சுந்தர்ராஜின் மகன் பிரவின்ராஜ் என்ற 23 வயது இளைஞரை காதலித்தார்.. இவர்களின் மிக தீவிரமான காதல், சுஷ்மிதாவின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது.. கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்... மகளுக்கு அறிவுரை சொன்னார்கள்..

வேப்பமரத்தில் சுஷ்மிதா

ஆனாலும், குடும்பத்தாரின் எதிர்ப்பையும் மீறி, கடந்த ஆண்டு அக்டோபர் 27ம் தேதி சேத்தியாத்தோப்பு தீப்பாஞ்சநாச்சியார் கோவிலில் காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.. ஆதிவராகநத்தத்தில் தனியாக வீடு எடுத்து அதில் வசித்து வந்தனர்.

இதற்கு பிறகு இரு குடும்பங்களும் சமரசம் அடைந்த நிலையில், சுஷ்மிதாவின் பெற்றோர் அடிக்கடி மகளை நேரில் சந்தித்து சென்றதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், கடந்த 6ம் தேதி இரவு 11.50 மணியளவில் வீட்டில் இருந்த சுஷ்மிதா திடீரென காணாமல் போனார்... கணவர் பிரவின்ராஜ் அவரை தேடியபோது, வீட்டின் பின்புறம் இருந்த வேப்பமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த சுஷ்மிதாவை பார்த்து அலறினார்..

என்ன காரணம்

உடனடியாக உறவினர்கள் உதவியுடன் மீட்கப்பட்ட சுஷ்மிதாவை , சிதம்பரம் ராஜமுத்தையா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சுஷ்மிதா இறந்துவிட்டார்.. இதையடுத்து, மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, புவனகிரி போலீசுக்கு சென்று பாக்கியராஜ் புகார் தந்தார்.. இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசாரும் விசாரணையை துவங்கி உள்ளனர்..

இந்த மரணம் குறித்து, சிதம்பரம் சப்-கலெக்டர் கிஷன்குமார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சிதம்பரம் டி.எஸ்.பி. பிரதீப் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

கலைந்த கனவுகள்

ஆனால், வீட்டில் இருந்த சுஷ்மிதா எதற்காக இரவு 11.50 மணிக்கு தற்கொலை செய்தார்? என்பதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. ஆசை ஆசையாக காதலித்து, வீட்டையும் எதிர்த்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இரண்டே மாதத்தில் இளம் பெண்ணின் மரணம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது..!!

நர்ஸ் கனவும் நிறைவேறாமல், குடும்ப வாழ்க்கையும் கை கொடுக்காமல் 19 வயதிலேயே சுஷ்மிதா காற்றில் கலந்துவிட்டார்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+