கடலூர் அருகே காட்டுமன்னார்கோவிலில்.. காதலித்த ஆசிரியைக்கு நடந்த காட்டுமிராண்டித்தனம்.. தந்தை கைது
கடலூர்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே டி.மடப்புரம் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜூனன். கூலி தொழிலாளியான இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இவருக்கு ஒரு மகளும் இருந்தார். பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்துள்ளார் அர்ஜூனன். எம்.எஸ்சி., எம்.எட் படித்த மகள் அபிதா, தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் மகள் யாரையோ காதலிப்பதாக அறிந்த அர்ஜூனன் செய்த காட்டுமிராண்டித்தனமான தவறை பார்த்து போலீஸ் ஆடிப்போனார்..
உன்னை பெற்று, வளர்த்து ஆளாக்கி, படிக்க வைத்த எனக்கு, உனக்கு நல்ல பையனை பார்க்க தெரியாதா..உனக்கானவனை எப்படி நீ முடிவு செய்யலாம். அதையும் நானே முடிவு செய்வேன் என்ற மனநிலையில் பல பெற்றோர் இருக்கிறார்கள். இப்படி நினைக்க காரணம், தவறான நபரிடம் சிக்கி வாழ்க்கையை தொலைக்கக்கூடாது என்பது ஒரு காரணம் என்றாலும், சாதியும், ஆணவமும் ஒரு காரணமாகவே இருக்கிறது.

இதில் சாதிக்காவும், கௌரவித்திற்காகவும் காதலை எதிர்ப்பவர்கள் தான் அதிகம். சிலர் கௌரவித்திற்காகவும், தன் பேச்சை கேட்கவில்லை என்ற ஆத்திரத்திலும் பெற்ற பிள்ளை என்று பார்ப்பது இல்லை.. காதலித்த மகளை பேனா கத்தியால் கழுத்தறுத்து போட்டிருக்கிறார் தந்தை..
தனியார் பள்ளி ஆசிரியை
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள டி.மடப்புரம் கிராமத்தை சேர்ந்த 57 வயதாகும் அர்ஜூனன் என்பவர் கூலி தொழிலாளியாவார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். 27 வயதில் அபிதா என்ற மகள் இருந்தார். எம்.எஸ்சி., எம்.எட் படித்துள்ள அபிதா, காட்டுமன்னார்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார்.
திருமணம் தள்ளிப்போனது
தனது மகள் அபிதாவிற்கு திருமணம் செய்து வைக்க அர்ஜூனன் வரன் பார்க்க தொடங்கினார். தொடர்ந்து சில இளைஞர்களின் புகைப்படத்தை அபிதாவிடம் அர்ஜூனன் காண்பித்துள்ளார். ஆனால் ஏதாவது ஒரு காரணத்தை கூறி, அபிதா அந்த வரன்களை தட்டிக்கழித்தபடியே இருந்தாராம். ஆசிரியை அபிதா தனது திருமணத்தை தள்ளிப்போட்டுக் கொண்டே வந்ததாக கூறப்படுகிறது.
காதலிப்பதை அறிந்தார்
மகள் அபிதாவின் தொடர்ச்சியான இந்த செயலால் அர்ஜூனனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து மகளின் நடவடிக்கையை கண்காணித்து விசாரித்தார். அப்போதுதான் மகள் அபிதா யாரோ ஒருவரை காதலிப்பது தெரியவந்தது. இது அர்ஜூனனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இத்தனை நாட்களாக வரன்தேடி வரும் நம்மிடம் சொல்லாமல் இப்படி காதலிக்கிறாரே என்று ஆத்திரத்தில் இருந்துள்ளார் அர்ஜூனன்.
மகள் என்று கூட பார்க்காத தந்தை
இந்த நிலையில் நேற்று அபிதா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். நண்பகல் 12 மணியளவில் அர்ஜூனன் தனது மகளிடம் ஏன் நான் பார்க்கும் மாப்பிள்ளையை தட்டிக்கழிக்கிறாய் என்று கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அர்ஜூனன் தான் பெற்ற மகள் என்றுகூட பாராமல், பேனா கத்தியால் அபித்தாவின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்தம் வெளியேறிய நிலையில் அபிதா கதறி உள்ளார். ஆனால் அப்போதும் இரக்கமே இல்லாமல் அர்ஜூனன், அங்கு கிடந்த கட்டையால் மகளை அவர் தலையில் அடித்துக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் வீட்டைவிட்டு வெளியே சென்றார்.
தந்தை போலீசில் சரண்
இதுபற்றி தகவல் அறிந்த புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அபிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அர்ஜூனனை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications