கடலூரில் விஜயா வைத்த மீன்குழம்பு.. பரலோகம் போன கணவர்.. இப்ப உ.பி.யில் வேற மாதிரி.. பிங்கியை காணோமாமே
கடலூர்: கள்ளக்காதல் விவகாரத்தினால் ஏற்படும் விவாகரத்துகள், வன்முறைகள் பெருகி கொண்டிருக்கின்றன. திருமணமான ஆண்கள், பெண்கள், உலகமறியாத பச்சிளம் குழந்தைகள் என பல உயிர்கள், இந்த கள்ளக்காதல் சம்பவங்களுக்காக காவு வாங்கப்படுகின்றன. ஏற்கனவே இதுகுறித்த கலக்கங்களும், வருத்தங்களும் நிலவும் சூழலில், உத்தரபிரதேசத்தில் நடந்துள்ள சம்பவம் மொத்த பேருக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது. யாரிந்த பிங்கி? என்ன நடந்தது?
கடலூரில் கடந்த மாதம் ஒரு சம்பவம் நடந்தது.. குள்ளஞ்சாவடி அடுத்த கட்டியங்குப்பம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் 50 வயது கோபாலகண்ணன். மனைவி விஜயாவுக்கு 48 வயதாகிறது.. திருமணம் முடிந்து 27 வருடங்கள் ஆகின்றன. ஆனால், குழந்தை இல்லை..

கோபாலகண்ணன் கோவை கல்லூரி ஒன்றில் தங்கியிருந்து சமையல் வேலை பார்ப்பவர்.. காலேஜ் லீவு என்றால் மட்டுமே சொந்த ஊருக்கு செல்வார். இந்நிலையில், விஜயாவிற்கும், எதிர்வீட்டு தேவநாதனுக்கும் கள்ளக்காதல் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.. தேவநாதனுக்கு 57 வயது. திருமணமாகி 3 பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
கடலூர் விஜயா
இந்த கள்ளக்காதல் விவகாரம், கோபாலகண்ணனுக்கு தெரிந்துவிடவும், கடந்த சில மாதங்களாகவே வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் எரிச்சலடைந்த விஜயா, மீன் குழம்பு வைத்து, அதில், பூச்சி மருந்தையும் கலந்து கோபாலகண்ணனுக்கு சாப்பிட தந்துள்ளார். கோபால கண்ணனுக்கு மீன்குழம்பு என்றால் மிகவும் பிடிக்குமாம்.
எனவே, இதற்காகவே மீன் குழம்பு வைத்து, விஷம் கலந்துள்ளார்.. இதை சாப்பிட்டு வாயில் நுரை தள்ளி கோபாலகண்ணன் இறந்துவிட்டார். இறுதியில், விஜயாவும், கள்ளக்காதலனும் ஜோடியாக கைதானார்கள். இந்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது.
இதோ உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்திலும் ஒரு கொடுமை நடந்துள்ளது. அங்குள்ள பங்கேலா என்ற கிராமத்தை சேர்ந்தவர் அனுஜ் குமார்.. 30 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் பிங்கி.. 26 வயதாகிறது.. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது.
இரவில் காபி குடித்த நபர்
கடந்த 25-ந்தேதி இரவு, கணவனுக்கு பிங்கி காபி தந்துள்ளார்.. அதை குடித்ததுமே அவரது உடல்நிலை மோசமாகிவிட்டது. இதனால், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அனுஜ் குமாரை பரிசோதித்து பார்த்தபோதுதான், அவர் குடித்த காபியில் விஷம் கலந்துள்ளதாக தெரிவித்தனர். இப்போது அனுஜ் குமாருக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது. ஆனால், சீரியஸாக இருக்கிறாராம்..
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் பிங்கியை அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தி அனுஜ் குமாருடன் திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது. அதுமட்டுமல்ல, பிங்கி இன்னொரு நபரை காதலித்து வந்தாராம். திருமணம் நடந்தும்கூட, அந்த காதலை விடாமல் தொடர்ந்து வந்துள்ளதாக போலீசார் கூறுகிறார்கள்.. இப்போது பிங்கி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், பிங்கியை காணவில்லை. தேடிக் கொண்டிருக்கிறார்.
மனைவிக்கு திருமணம் செய்த கணவர்
கடந்த வாரம் உத்தரபிரதேசத்தில், அமெரிக்க கடற்படை நிறுவன அதிகாரி சவுரப் ராஜ்புத் என்பவரை, அவரது மனைவி முஸ்கன் ரஸ்தோகியும், கள்ளக்காதலன் சாஹில் சுக்லா இருவரும் சேர்ந்து கொன்று விட்டார்கள்.. பிறகு கணவனின் சடலத்தை 15 துண்டுகளாக வெட்டிய மனைவி, அந்த உடலை காலி டிரம்மில் போட்டு, டிரம்மின் மீது கான்கீரிட் கலவையால் மூடி சமாதியாக்கியிருந்தார்.
இப்படி நாளுக்கு நாள் கள்ளக்காதல் கொலைகள் அதிகரித்து வருகின்றன. அதனால்தான், தன்னுடைய உசுரை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்பதற்காக, கள்ளக்காதலில் இறங்கிய தன்னுடைய மனைவியை, அந்த கள்ளக்காதலனுக்கே நேற்று திருமணம் செய்துவைத்துவிட்டார் ஒரு கணவர்...!!












Click it and Unblock the Notifications