கடலூரில் பிரபாவதி கள்ளக்காதல்.. நெய்வேலி என்எல்சி சுரங்கப் பள்ளம் வரை சென்று.. அந்த குழந்தைகள்?
கடலூர்: கள்ளக்காதல் விவகாரங்கள் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கும் நிலையில், அது தொடர்பான குற்றங்களும் பெருகி வருகின்றன.. உறவு சிக்கல்களால், குடும்பங்கள் பிரிந்து, குழந்தைகளும் நடுத்தெருவுக்கு வந்துவிடும் சூழல் இன்று ஏற்பட்டுள்ளது.. 2 நாட்களுக்கு முன்புதான், கடலூரில் கணவருடன் உல்லாசமாக இருந்த அக்காவை கொலை செய்தார் உடன்பிறந்த தங்கை.. இப்போது மீண்டும் கடலூர் மாவட்டம் அதிர்ச்சியில் உள்ளது. நெய்வேலி என்.எல்.சி. சுரங்க பள்ளம்வரை சென்றுள்ளது ஒரு கள்ளக்காதல்.. இது தொடர்பாக மந்தாரக்குப்பம் போலீசாரும் முழு விசாரணையை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் அருகே உள்ளது வடக்கு வெள்ளூர் ஊராட்சி.. இங்கு வசித்து வந்த தம்பதி பாஸ்கர் - பிரபாவதி.. இந்த தம்பதிக்கு கோகுல் (வயது 9) என்ற மகனும், மித்ரா (வயது 6) என்கிற மகளும் உள்ளனர். இருவரும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.
ஆனால், பாஸ்கர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, ஒரு வருடத்துக்கு முன்பு இறந்துவிட்டார்.. இதனால் 33 வயதான பிரபாவதி தன்னுடைய 2 குழந்தைகளையும் வளர்த்து வருகிறார்..

அம்மா தனலட்சுமி
இந்நிலையில், கடந்த 7ம் தேதி தன்னுடைய அம்மா தனலட்சுமியிடம், நெய்வேலிக்கு சென்றுவிட்டு வருவதாக சென்றிருக்கிறார் பிரபாவதி.. ஆனால், இரவு நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை.. இதனால், பிரபாவதிக்கு போன் செய்துள்ளார் தனலட்சுமி.. ஆனால், சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது.. இதனால் மகளை பற்றின தகவல் தெரியாமல் தனலட்சுமி பதறிப்போனார்.
பிரபாவதியை எங்கெங்கோ தேடியும் கிடைக்காததால், மந்தாரக்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசாரும் இந்த புகாரின்பேரில் விசாரணையை துவங்கினார்கள்.. அப்போதுதான், பிரபாவதியின் கள்ளக்காதல் அம்பலமானது.. அதே பகுதியை சேர்ந்த 34 வயது சம்பத் என்பவருடன் ரகசிய உறவில் பிரபாவதி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சம்பத்தை பிடித்து போலீசார் விசாரித்தபோது, பிரபாவதி பற்றின உண்மையை சொன்னார்.
பகீர் வாக்குமூலம்
இந்த சம்பவம் தொடர்ந்து சம்பத் தந்த வாக்குமூலத்தில், "நான் பிரபாவதியுடன் நெருங்கி பழகி வந்தேன். எங்களது இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. கடந்த 7-ந் தேதி காலையில், பைக்கில் பிரபாவதியை நெய்வேலிக்கு அழைத்து சென்றேன். அங்கிருந்து இரவு 7 மணிக்கு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தோம்.
அப்போது வழியில் "நான் தண்ணி அடிப்பதால், என்னை விட்டு இப்போதெல்லாம் விலகுகிறாயா" எனறு கேட்டேன். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் வெடித்தது. பைக்கை என்எல்சி சுரங்கம் அருகே நிறுத்திவிட்டு, பிரபாவதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன்.
போஸ்ட் மார்ட்டம்
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த நான் கீழே கிடந்த கட்டையை எடுத்து பிரபாவதி தலையில் ஓங்கி அடித்தேன். இதில் பிரபாவதி மயங்கி விழுந்துவிட்டார்.. உடனே அவரது தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்துச் சென்று அருகிலிருந்த என்எல்சி சுரங்கத்தின் 50 அடி ஆழ பள்ளத்தில் தள்ளிவிட்டு அங்கிருந்து சென்று விட்டேன். அதற்கு பிறகு பிரபாவதி அங்கேயே இறந்துவிட்டார்" என்றார்.
சம்பத்தின் இந்த வாக்குமூலத்தையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற மந்தாரக்குப்பம் போலீசார் அழுகிய நிலையில் கிடந்த பிரபாவதி சடலத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு சம்பத்தை கைது செய்து விசாரணையும் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. என்.எல்.சி. சுரங்க பள்ளத்தில் நடந்த சம்பவத்தினால் நெய்வேலியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications