சோதனை மேல் சோதனை! சொத்துக்களை ஜப்தி செய்த வங்கி! கடனில் சிக்கி தத்தளிக்கும் திமுக எம்.பி.!
கடலூர்: தெரிஞ்ச தொழிலை விட்டவனும் கெட்டான்; தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் என்ற பழமொழி யாருக்கு பொருந்துமோ இல்லையோ கடலூர் திமுக எம்.பி.ரமேஷுக்கு பொருந்தியுள்ளது.
முந்திரி பருப்பு ஏற்றுமதியில் கொடிகட்டிப் பறந்து தொழிலதிபர் என்ற அடைமொழியுடன் உலா வந்த ரமேஷ், அரசியல்வாதி அவதாரம் எடுத்து இன்று கோடிக்கணக்கான ரூபாய் கடனில் சிக்கி தத்தளித்து வருகிறார்.
இவருக்கு கடன் கொடுத்த தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி இவரது சொத்துக்களை ஜப்தி செய்யும் அளவுக்கு நடவடிக்கை எடுத்திருப்பது தான் தற்போதைய தகவல்.

கடலூர் தொகுதி
கடலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினரான ரமேஷ் கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை தான் உண்டு தன் தொழில் உண்டு என்றிருந்தார். முந்திரி பருப்பு ஏற்றுமதி தொழிலில் கொடிகட்டி பறந்து வந்த ரமேஷ் தமிழகத்திலும் பல்வேறு ஊர்களில் டிரை ஃபுரூட்ஸ் கடைகள் நடத்தி வருகிறார். இந்நிலையில் அவருக்குள் ஒளிந்திருந்த அரசியல் ஆசை துளிர்விட்டதன் விளைவாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவில் சீட் வாங்கி பல கோடிகளை வாரி இறைத்து வெற்றி பெற்றார்.

சொத்துக்கள் ஜப்தி
இச்சூழலில் இவரது முந்திரி ஆலையில் தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததால் அந்த வழக்கில் சிக்கி ரமேஷ் தத்தளித்து வருகிறார். வழக்கு விசாரணை என அதை ஒரு வழியாக முடிப்பதற்கு முன்னரே வங்கி வடிவில் அவரை புது சோதனை ஒன்று துரத்தி வருகிறது. தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் ரமேஷ் வாங்கிய கடனுக்கு தவணைத் தொகையை முறையாக திருப்பிச் செலுத்தாததால் சொத்துக்களை ஜப்தி செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.

ரூ.50 கோடி
தற்போதைய நிலவரப்படி கடலூர் திமுக எம்.பி. ரமேஷுக்கு ரூ.50 கோடிக்கும் மேல் கடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே ஜப்தி நடவடிக்கைக்கு சென்ற வங்கி ஊழியர்களை எம்.பி.யின் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தியதால் காவல்துறையினர் அங்கு வரவழைக்கப் பட்டிருக்கின்றனர். இதனால் நொந்து போன திமுக எம்.பி. ரமேஷ், இந்த விவகாரம் தொடர்பாக தனது வழக்கறிஞர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

பழமொழி பொருந்தும்
தெரிஞ்ச தொழிலை விட்டவனும் கெட்டான்; தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் என்ற பழமொழி யாருக்கு பொருந்துமோ இல்லையோ கடலூர் திமுக எம்.பி.ரமேஷுக்கு பொருந்தியுள்ளது. அரசியலை தவிர்த்து எப்போதும் போல் தனது தொழிலில் மட்டும் அவர் கவனம் செலுத்தியிருந்தால் இந்தளவுக்கு நிலைமை சென்றிருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் அவரை பற்றி அறிந்தவர்கள்.
-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியானது.. சின்னதுரைக்கு மீண்டும் வாய்ப்பு! -
பெரும் பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்படுமா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் கேள்வி -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
செம ஷார்ப்..வேட்பாளர் பட்டியலை பார்த்து பார்த்து செதுக்கிய ஸ்டாலின்! திமுகவில் ஓங்கிய உதயநிதியின் கை -
ஆண்டிப்பட்டியில் மீண்டும் ‘சகோதர யுத்தம்’.. அண்ணன் திமுக vs தம்பி அதிமுக.. வெல்லப்போவது யார்? -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
DMK Manifesto: மகளிர் உரிமைத் தொகை ரூ 2000 உயர்வு! 8ஆவது ஊதியக் குழு அமல்! ஸ்டாலின் அறிவிப்பு -
Rahul Gandhi: தமிழக அரசியல் மீது ராகுல் காந்தியின் பாராமுகம்… திமுக தலைமை மீது அதிருப்தியா? -
விவசாயிகளுக்கு திமுகவின் ‘ஜாக்பாட்’! மீட்டர் பொருத்தப்படாத நவீன பம்ப்செட் வழங்கப்படும் என வாக்குறுதி -
புதுமை பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கான உதவித்தொகை ரூ.1,500ஆக உயர்த்தப்படும்: திமுக வாக்குறுதி! -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அரசு வேலை.. தாமதம் இருக்காது.. உடனே 1.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.. திமுக தேர்தல் அறிக்கை











Click it and Unblock the Notifications