திமுக தலைமைக்கு தலைவலி.. கடலூர் மேயருக்கு எதிராக 10 கவுன்சிலர்கள்.. ராஜினாமா செய்யப்போவதாக வார்னிங்!
கடலூர்: கடலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் 10 பேர், ராஜினாமா செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தலில், அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான கடலூர் நகரச் செயலாளர் பழக்கடை ராஜாவின் மனைவி சுந்தரியை அறிவித்தது தலைமை. இதனால் கடுப்பான மற்றொரு தரப்பு கவுன்சிலர்கள் மாவட்ட பொருளாளர் வி.எஸ்.எல் குணசேகரனின் மனைவி கீதாவுக்கு ஆதரவு கொடுத்தனர். கடலூர் எம்.எல்.ஏ அய்யப்பனின் ஆதரவுடன் கீதாவை மேயர் வேட்பாளராக களமிறக்க முயன்றனர்.

கட்சித் தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக, போட்டி வேட்பாளரை நிறுத்திய திமுக எம்.எல்.ஏ அய்யப்பனை கட்சித் தலைமை சஸ்பெண்ட் செய்தது. அதன் பிறகு அய்யப்பனை மீண்டும் கட்சித் தலைமை சேர்த்துக்கொண்டாலும், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மேயர் தரப்பு, அய்யப்பன் ஆதரவு கவுன்சிலர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், கடலூர் மாநகராட்சியில் திமுக கவுன்சிலர்கள் 2 பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர்.
கடலூர் மாநகராட்சியில் ஒவ்வொரு மாமன்ற கூட்டம் நடைபெறும்போதும் தங்கள் பகுதிக்கு எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி ஐயப்பன் ஆதரவு மாமன்ற உறுப்பினர்கள் புகார் தெரிவித்து கோஷம் எழுப்புவதும், வெளிநடப்பு செய்வதும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தங்கள் பகுதிக்கு எந்த ஒரு மக்கள் நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை எனக் கூறி அய்யப்பன் ஆதரவு மாமன்ற உறுப்பினர்கள் 10 பேர் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் திரண்டு மாநகராட்சி ஆணையர் காந்திராஜை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் வரும், 31ஆம் தேதி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தில் காந்தி சிலை முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருப்பதாகவும், தாங்கள் சந்தித்து வரும் பிரச்சனை குறித்து மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி மேயர், துறை அமைச்சர், கட்சி மேலிடம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் புகார் தெரிவித்த நிலையில் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த உண்ணாவிரத போராட்டத்திலும் தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் தங்களது அடையாள அட்டைகளை ஒப்படைத்து மாமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்யப் போவதாக அவர்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர். ராஜினாமா செய்வோம் என ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளதால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அண்மையில் நெல்லையில் மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் கோரிய நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு தலையிட்டு, பிரச்சனையை தீர்த்து வைத்தார். இந்நிலையில், கடலூர் மாநகராட்சியில் திமுகவில் உட்கட்சிப் பூசல் தீவிரமடைந்துள்ளது திமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா











Click it and Unblock the Notifications