முற்றும் உட்கட்சி மோதல்! கடலூரில் திமுக அமைச்சர் & எம்எல்ஏ ஆதரவாளர்கள் அடிதடி! மாறி மாறி சாலை மறியல்
கடலூர்: கடலூரில் மாநகராட்சி மாமன்ற கூட்டத்திலேயே திமுகவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. கடலூர் மோயராக உள்ள மேயர் சுந்தரி தலைமையில் இந்த மாநகராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் தங்களது வார்டுகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து விரிவாக விளக்கிப் பேசினர். மாமன்ற உறுப்பினர்களுக்கு மேயர் சுந்தரி பதில் அளித்தார்.

கடலூர்
அப்போது 8ஆவது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் சுமதி என்பவர் தங்கள் வார்டு குறித்து சில கேள்விகளை எழுப்பினார். அதற்கு மேயர் சந்தரி பதில் அளிக்க முனைந்தார். இருப்பினும், அதற்குள்ள மற்ற வார்டு உறுப்பினர்கள் அதற்குப் பதில் அளித்தனர். அப்போது பல உறுப்பினர்கள் மாறி மாறி பேசியதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது.

தாக்குதல்
இந்த கூட்டத்தில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஒரு தரப்பாகவும் கடலூர் எம்எல்ஏ ஐயப்பன் ஆதரவாளர்கள் ஒரு தரப்பாகவும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் மாறி மாறி குற்றஞ்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தீவிரமடைந்த நிலையில், எம்.எல்.ஏ ஆதரவாளராக கூறப்படும் 11 மாவட்ட உறுப்பினர்கள் சேர்ந்து 43வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஃபாருகலி, 42 வது வார்டு மாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமியின் கணவர் செந்தில்குமார் ஆகியோரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

வலியுறுத்தல்
அதுவும் மாநகராட்சி அலுவலகத்திலேயே வைத்துத் தாக்கி உள்ளனர். இதனால் ஆவேசமடைந்த மற்றொரு தரப்பினர் மாமன்ற உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கூறி மாமன்ற கூட்டத்திலேயே மேயர் சுந்தரி முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மேயர் சமாதானம் செய்தார். இருப்பினும், தாக்குதல் நடத்திய நபரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

போராட்டம்
இதையடுத்து மாமன்ற கூட்டம் முழுமையாக நிறைவு பெறாமலேயே கூட்டத்திலிருந்து மாநகராட்சி மேயர் வெளியேறினார். அதன் பின்னரும் பிரச்சினை ஓயவில்லை. இரு தரப்பினரும் மாநகராட்சி அலுவலகத்திற்கு முன்பு தனித்தனியாகச் சாலையில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர்.. வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் திமுக கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

போலீஸ்
அதேபோல எம்எல்ஏ ஐயப்பன் ஆதரவாளர்கள் மேயருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆளும் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்களே இரு வேறு பிரிவுகளா பிரிந்து சாலை மறியல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் அவர்களைச் சமாதானப்படுத்தி, போக்குவரத்தைச் சீர் செய்ய முயன்றனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
'இல்லத்தரசி' கூப்பன்.. எப்படி வழங்கப்படும்? இப்போதே திட்டத்தை கையில் எடுக்கும் திமுக? கசிந்த தகவல்! -
போலீசில் சிக்கிய நடிகை ஜூலி.. மெரினாவில் திமுகவுக்கு ஆதரவு - தவெகவிற்கு எதிர்ப்பு பிரசாரத்தால் வந்த சிக்கல் -
திடீரென மயங்கிய முதியவர்.. யோசிக்காமல் அவிநாசி இளம் திமுக பெண் வேட்பாளர் செய்த செயல்.. நெகிழ்ச்சி -
சேகர் பாபுவை குறிவைத்த ஐடி.. சென்னையை பரபரபாக்கிய சோதனை! திமுக சீனியர்களுக்கு ஸ்கெட்ச் போடும் டெல்லி? -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
நெல் ஊக்கத்தொகை விவகாரம்.. கடிதத்தை வெளியிட்டு.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன் -
Election Exclusive: மதுரை மத்தியில் தலைக்கு மேல் கத்தி.. குட்டையை குழப்பும் அழகிரி & கோ! அதிரடி ஆக்ஷனில் இறங்கிய திமுக! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி












Click it and Unblock the Notifications