திட்டக்குடி திமுக எம்எல்ஏ சி.வெ.கணேசனுக்கு கொரோனா உறுதி.. மருத்துவமனையில் அனுமதி!
கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி திமுக எம்எல்ஏ சி.வெ.கணேசனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் அடுத்தடுத்து அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதிலும் திமுக, அதிமுகவை சேர்ந்த எம்எல்ஏக்களுக்கு அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல்முறையாக திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனா தொற்று ஏற்பட்டு, அதற்கு பலியானார்.

அவரை தொடர்ந்து வரிசையாக பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. திமுகவில் செஞ்சி சட்டசபை உறுப்பினர் மஸ்தானுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர் தற்போது குணமடைந்து விட்டார்.
அதிமுகவில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் தமிழக அமைச்சர்கள் கேபி அன்பழகன், தங்கமணிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இரண்டு நாட்கள் முன் அதிமுக எம்எல்ஏ நிலோபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது .
அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ. பழனி, பரமக்குடி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ .சதன் பிரபாகரன், உளுந்தூர்பேட்டை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ குமரகுரு, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் (குணமாகிவிட்டார்) ஆகியோருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி திமுக எம்எல்ஏ சி.வெ.கணேசனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற இருக்கிறார்.
-
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications