Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடலூரில் சத்தம் போட்ட "காலி பானை".. அத்தனை பேர் முன்பும், பட்டை நாமத்துடன்.. சிவக்குமார் போட்ட போடு

Subscribe to Oneindia Tamil

கடலூர்: காலி பானையுடன் கூட்டத்தில் பங்கேற்க வந்த கவுன்சிலரால் கடலூர் மாவட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டுவிட்டது. என்ன காரணம்?

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த நல்லூர் ஒன்றியத்தில் மொத்தம் 21 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியில் இருக்கிறார்கள்.. இதில் திமுக கவுன்சிலர்கள் 7 பேர் ஆவார். அதிமுகவை சேர்ந்த கவுன்சிலர்கள் 7 பேர்.. பாமகவில் 2 கவுன்சிலர்களும், சுயேச்சை கவுன்சிலர்களாக 5 பேரும் உள்ளனர்...

Cuddalore Councillor

இவர்களை தவிர சுயேச்சை வேட்பாளரும் இருக்கிறார். இவர் பெயர் சிவக்குமார்.. வரமனூர், கோ.கொத்தனூர், திருப்பெயர் ஆகிய கிராமங்கள் உள்ளடக்கிய 7வது வார்டு கவுன்சிலர்தான் இந்த சிவகுமார்.

எதிர்ப்புகள்: சுயேச்சை வேட்பாளராக வெற்றி பெற்றதிலிருந்தே தன்மீதான கவனத்தை குவித்து வருபவர்.. அத்துடன், தொகுதியில் நிலவும் குறைகளையும் விடாமல் எடுத்து சொல்லி, கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் பதிவு செய்து வருபவர் சிவக்குமார்.

முக்கியமாக, கடந்த 2019ம் ஆண்டு முதல் ஊராட்சி ஒன்றிய நிதியிலிருந்து தங்களது கிராமத்திற்கு எந்தவிதமான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுவதில்லை என்பதே சிவகுமாரின் ஓயாத குற்றச்சாட்டாகும்.. இது குறித்து மாவட்ட கலெக்டரிடமும், அரசு அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டிருக்கிறார் சிவக்குமார்.. பலமுறை புகார் தந்தும்கூட, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஆதங்கத்துடன் சொல்லி வருகிறார் சிவக்குமார்.

மாதாந்திர கூட்டம்: இப்படிப்பட்ட சூழலில், நேற்று நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கான மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது... ஒன்றிய பெருந்தலைவர் செல்வி ஆடியபாதம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் ஆகியோர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக சிவகுமார் உள்ளே நுழைந்தார்.

அப்போது, நெற்றியில் பட்டை நாமத்தை போட்டுக் கொண்டும், கையில் ஒரு காலி பானையை எடுத்து கொண்டும் வந்தார். தன்னுடைய சீட்டில் உட்கார போகும்போது, கையில் கொண்டுவந்த காலி பானையை முன்வைத்து, திடீரென தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டுவிட்டார்..

தலைவர் விளக்கம்: தங்கள் கிராமத்திற்கு ஊராட்சி ஒன்றிய நிதியிலிருந்து ஒரு பைசா கூட வரவில்லையே ஏன்? என்று காலிப்பானையை காட்டி, அங்கிருந்த தலைவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அரசு சார்பில் நிதி ஒதுக்கப்படவில்லை.. அப்படி ஒதுக்கப்பட்டவுடனேயே உங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும், உரிய பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தலைவர் செல்வி விளக்கம் அளித்தார். ஆனாலும் இந்த விளக்கத்தை சிவக்குமார் ஏற்க மறுத்தார்..

உடனே தன்னுடைய கிராமத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என்று கூறி கண்டன முழக்கங்களை எழுப்ப ஆரம்பித்துவிட்டார்.. சிவக்குமாரை பார்த்ததுமே, அங்கிருந்த பிற கவுன்சிலர்களும் தங்களது கிராமத்திற்கும் நிதி ஒதுக்க வேண்டும் என்று கூறி முழக்கங்களை எழுப்பினர்.. அடுத்தடுத்தது எழுந்த முழக்கங்களினால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+