கடலூர் சிதம்பரத்தில் இன்ஜினியர் உடலை வாங்ககூட யாருமே வரல.. வீட்டில் 74 பவுன் தங்கம், கோடியில் சொத்து
கடலூர்: ஏராளமான தங்கம், சொத்து, பணம் என எல்லாமே இருந்தும்.. யாருமே இல்லாமல் கடைசி காலம் ஒருவருக்கு இருந்தால்.. அதனை உண்மையில் அது மிகவும் கசப்பானது.. அதுவும் அவரது கடைசி நிமிடங்களில் கூட மனைவி, மகள், மகன் என யாருமே இல்லை என்றால் அது உண்மையில் பெரிய ஏமாற்றம் ஆகும். அப்படித்தான் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடந்துள்ளது. அவரது வீட்டில் இருந்த 74 பவுன் நகைகள், ரூ.1.5 லட்சம் ரொக்கம் மீட்கப்பட்டது. அவரது மனைவி, மகன், மகள் யார்?, எங்கே இருக்கிறார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதுமையில் ஒருவர் எவ்வளவு தான் சொத்து வைத்திருந்தாலும், அவருக்கு என்று பிள்ளைகளோ, கணவன் அல்லது மனைவி இல்லை என்றால், அதாவது கடைசி காலத்தை தனிமையில் தான் வாழ்ந்து முடித்தார் என்றால் அது மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கும். அப்படி ஒரு சம்பவம் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடந்துள்ளது. இறந்த உடலை வாங்க கூட யாருமே வரவில்லை.. இத்தனைக்கும் கிட்டத்தட்ட கோடிகளில் அவருக்கு சொத்து உள்ளது. அவரை விட்டு, மனைவி, பிள்ளைகள் பிரிந்து போய்விட்டார்கள்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைநகர் முத்தையா நகரில் 65 வயதான பலராமன் என்பவர் வசித்து வந்தார். இவர் கட்டிட என்ஜினியர் ஆவார். பலராமன் தனது மனைவி மற்றும் குடும்பத்தினரை பிரிந்து தனியாக வசித்து வந்திருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பலராமனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து அவர், அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பலராமன் காலமானார், ஆனால் அவரது உடலை பெற்றுக்கொள்ள யாருமே வரவில்லை.
இது குறித்த மருத்துவர்களின் புகாரின் பேரில் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார், அவரது வீட்டிற்கு சென்று அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், அவருக்கு இந்திரா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருப்பதும், ஆனால் அவர்கள் எங்கே வசிக்கிறார்கள் என்பது குறித்து பக்கத்து வீட்டில் வசிக்கும் யாருக்குமே தெரியவில்லை.
இதனை தொடர்ந்து இன்ஜினியரிங் பலராமனிடம் மேஸ்திரியாக பணிபுரிந்தவர் மற்றும் அங்கிருந்தவர்கள் முன்னிலையில் வீட்டை போலீசார் சோதனை செய்தனர். அவரது வீட்டில் 74 புவுன் தங்க நகைகளும், ரூ.1½ லட்சம் ரொக்கமும் இருந்தது. இதையடுத்து அந்த பணத்தை போலீசார் மீ்ட்டு, அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பதற்காக அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். மேலும் அவருடைய மனைவி மற்றும் மகன், மகள் எங்கே இருக்கிறார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். உடலை கூட யாருமே வாங்க வராத நிலையை கண்டு பலரும் வருத்தங்களை தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications