அப்டி போடு.. மூச்சிரைக்க ஓடிவந்து.. லேடி டாக்டரிடம் நெருங்கி சென்ற இளைஞர்.. அப்பறம் நடந்ததை பாருங்க
கடலூர் மருத்துவமனையில் டாக்டரிடம் காதலை சொல்லி உள்ளார் இளைஞர் ஒருவர்
கடலூர்: கடலூர் அரசு மருத்துவமனையில் அவசர அவசரமாக உள்ளே நுழைந்து இளைஞர் செய்த காரியத்தினால் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.
இந்த "காதல்" ஒருவருக்கு எப்படி வரும், எப்போ வரும், யாரிடம் வரும், எதனால் வரும் என்பதெல்லாம் நூற்றாண்டுகள் கடந்தும் யாராலும் கணிக்க முடிவதில்லை. ஆனால், காதல் மட்டும் புத்தம் புது பொலிவாக உலகம் முழுவதும் மலர்ந்து கொண்டே இருக்கிறது.
நேரம், காலம், இடம் எதையுமா பார்க்காமல் காதல் மலர்ந்துவிடுகிறது.. அதற்கு மருத்துவமனைகளும் விதிவிலக்கல்ல.

ராசாத்தி
சில மாதங்களுக்கு முன்பு அரியலூரில் ஒரு சம்பவம் நடந்தது.. அந்த பெண்ணின் பெயர் ராசாத்தி.. 24 வயதாகிறது.. ஒரு தனியார் பள்ளியில் டீச்சராக வேலை பார்த்துள்ளார்.. அப்போது அவரிடம் படிக்கும் 15 வயது மாணவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது... அந்த சிறுவன் விஷம் குடிக்க போய், மருத்துவமனையில் சிகிச்சை நடந்துள்ளது.. அங்கு வந்த டீச்சருக்கு சிறுவனிடம் காதல் வந்துவிட்டது.. அந்த பையனையும் இழுத்துக் கொண்டு ஊரை விட்டே ஓடிவிட்டார்..

ஸ்கூல் டீச்சர்
பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோர் போலீசுக்கு போனால், அவசர அவசரமாக ஒரு கல்யாணத்தை செய்து, வீட்டையும் வாடகைக்கு எடுத்து, அந்த பையனுடன் குடும்பமே நடத்த ஆரம்பித்துவிட்டார் டீச்சர்.. இவ்வளவும் 2 நாளில் செய்துள்ளார்.. கடைசியில் அந்த பெண்ணை போலீசார் போக்ஸோவில் கைது செய்து, சிறுவனை மீட்டனர்... மருத்துவமனையில் ஆரம்பித்த காதல் சிறைவாசம் வரை சென்றுவிட்டது.

தாத்தாவின் காதல்
அதேபோல 2 வருடத்துக்கு முன்பு, மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. அங்கே உயிருக்கு போராடி கொண்டு, தீவிர சிகிச்சை பெற்று கொண்டிருந்த 70 வயசு தாத்தாவுக்கு காதல் வந்துவிட்டது.. இவருக்கு பக்கத்திலேயே இன்னொரு படுக்கையில் சிகிச்சை பெற்று வந்த 55 வயது பெண்ணுடன் காதல் வந்தது.. இருவரின் படுக்கைகளும் அருகருகே இருந்ததால் 2 பேரும் மருத்துவமனையில் பேசிக் கொண்டே இருந்திருக்கிறார்கள்.. 3 நாள் பேசினார்களாம்.. பிறகு கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்து, அதன்படியே திருமணம் நடந்து முடிந்தது.

காதல்கள்
இதெல்லாம் ஒரு உதாரணம்தான்.. இப்படி மருத்துவமனையில் எத்தனையோ காதல்கள் பல அரும்பி வருவது இயல்பாகி விட்டது.. அந்த வகையில், நம் கடலூர் இளைஞர் ஒருத்தருக்கும் காதல் வந்துள்ளது.. அதுவும் லேடி டாக்டர் மீது.. கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அந்த பெண் டாக்டர் பணிபுரிந்து வருகிறார்... காலையில் வழக்கம் போல் நோயாளிகளை பரிசோதனை செய்து கொண்டிருந்தார். அப்போதுதான் திடீரென ஒரு இளைஞர் உள்ளே நுழைந்தார்..

லேடி டாக்டர்
பட்டப்பகலில், ஆஸ்பத்திரியில் மற்ற நோயாளிகள் இருக்கிறார்களே, டாக்டர் சிகிச்சை தந்து கொண்டிருக்கிறாரே என்றெல்லாம் அந்த இளைஞர் பார்க்கவில்லை.. அவசர அவசரமாக உள்ளே நுழைந்தவர், நேராக லேடி டாக்டரிடம் போய் நின்று, "நான் உன்னை லவ் பண்றேன், நீ என்ன சொல்றே" என்று கேட்டுள்ளார்.. இதைக் கேட்டு அந்த பெண் டாக்டர் அதிர்ந்து போய்விட்டார்.. இது தகராறாக உருமாறிவிட்டது..

டார்ச்சர்
காதலுக்கு பதில் சொல் என்று இளைஞர் தொந்தரவு செய்ய ஆரம்பித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த பெண் டாக்டர் உடனடியாக அரசு மருத்துவமனையில் உள்ள போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.அதன் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சம்பந்தப்பட்ட அந்த இளைஞரை சுற்றி வளைத்து பிடித்தனர்.. விசாரணையும் நடத்தினர்...

விசாரணை
அவர் பெயர் தாஸ்.. கடலூர் வெள்ளப்பாக்கம் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது... ஆனால், எதுக்காக அந்த பெண் டாக்டரிடம் இது போன்ற செயலில் ஈடுபட்டார்? டாக்டரை இளைஞருக்கு முன்கூட்டியே தெரியுமா? அதுக்கா ஏன் இவ்வளவு அவசரமாக ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தார்? என்பதெல்லாம் தெரியவில்லை.. போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள். இந்த சம்பவத்தால் கடலூர் அரசு மருத்துவமனை வளாகமே கொஞ்ச நேரத்தில் பரபரப்பாகிவிட்டது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications